இந்தியா | மருத்துவமனையில், ஒரு மாதத்தில் 100 குழந்தைகள் மரணம்! -

இந்தியா | மருத்துவமனையில், ஒரு மாதத்தில் 100 குழந்தைகள் மரணம்!

Spread the love

ஜனவரி 3, 2020

கோட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரிலுள்ள, கோட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரு மாதத்தில் 100 குழந்தைகளுக்கு மேல் மரணமடைந்திருப்பதாகவும் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மத்திய அரசின் சுகாதார அமைச்சு நிபுணர்களை அங்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

அங்கு அனுப்பப்பட்ட குழந்தை வைத்தியருட்பட்ட, நிபுணர்கள் சிகிச்சை முறைகள், சேவைகள் வழங்கல், கடமையாற்றும் பணியாளர், தாய்மார், குழந்தைகளுக்கான சேவைகள் ஆகியன பற்றிய விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பார்களென இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் ஹார்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மனையின் மருத்துவர்களில் எவ்வித தறுகளும் இல்லையெனவும், பெரும்பான்மையான குழந்தைகள் தூர இடங்களிலிருந்து மருத்துவர்களால் அங்கு சிகிச்சைக்கென அனுப்பப்பட்டவர்களெனவும், இவர்களில் எடை குறைந்த, அகாலமாகப் பிறந்த, தொற்றுநோய் கண்ட குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள் எனவும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

புது டில்லியிலிருந்து 400 கி.மீ. தொலைவில் இருக்கும் இம் மருத்துவமனையில், மாநிலத்தின் சிறந்த மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வந்தன என மாநில முதலமைச்சர் அஷோக் கேலொட் ருவீட் செய்துள்ளார்.

இம் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான உட்செலுத்தும் பம்புகள் (infusion pumps), சூடாக்கிகள் (warmers), மருந்து ஸ்பிறேகள் (nebulisers) உள்ளிட்ட 70 வீதத்துக்கும் அதிகமான உபகரணங்கள் தொழிற்படும் நிலையில் இருக்கவில்லை என சுகாதார அமைச்சு அதிகாரிகள் கூறியதாக பிறெஸ் ட்றஸ்ட் ஒஃப் இண்டியா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் பிரிவில் மருத்துவர்கள், பணியாளர் பற்றாக்குறை இருந்ததாகவும் தெரிகிறது.

100 கி.மீ. இற்கு அப்பாலிருக்கும் கிராமங்களிலிருந்து ஏழைக் கிராமத்தவர் தங்கள் நோயுற்ற குழந்தைகளை இந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவருவதும் அவர்களில் பலர் மருத்துவமனையை அடைய முன்னரே இறந்து விடுவதாகவும் தெரிய வருகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  What is dementia? Alzheimer's Research UK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *