இந்தியா: பிரதமர் மோடியின் ‘தந்தை பெயர்’ விவகாரத்தில் ராஹுல் காந்திக்கு இரண்டு வருட சிறை

2019இல் கோலார், கர்நாடகாவில் நடைபெற்ற மக்கள் சபைத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ என்ற குடும்பப் பெயரை அவதூறு செய்தார் எனக்கூறி காங்கிரஸ் கட்சியின் வயநாடு பாராளுமன்ற உறிப்பினர் ராஹுல் காந்தி மீது குஜராத் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

2019 பிரச்சாரத்தில் பேசிய காந்தி, “நிராவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என ஏஅன் எல்லா திருடர்களினது தந்தையர் பெயர்களும் மோடி எனவே இருக்கின்றன?” எனக் கேட்டிருந்தார். இதை ஆட்சேபித்து குஜராத் மாநில அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுராத் வெஸ்ட் பூர்ணேஷ் மோடி குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இதில் ராஹுல் காந்திக்கு 2 வருடச் சிறை வழங்லப்பட்டிருந்தது. ஆனாலும் அவரை ரூ 15,000 பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், 30 நாள் அவகாசம் கொடுத்து தீர்ப்புக்கு எதிராக மேல்முறைஈடு செய்யவும் அனுமதித்திருக்கிறது.

இவ்வழக்கின்போது ராஹுல் காந்தி நீதிமன்றத்தில் பிரசன்னமாக இருந்தார். அவரோடு பல காங்கிரஸ் தலைவர்களும் இருந்தார்கள். சுராத் காவல்துறை அவருக்கான பாதுகாப்பை அதிகரித்திருந்தது.

“இத் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ‘மோடி’ என்ற பெயரில் ஒரு சமூகம் இல்லை. அது ஒரு தந்தை வழிப் பெயர் மட்டுமே. வழக்குத் தொடுத்தவர் கூட பெயரை பூத்வாலா என இருந்த அவரது பெயரை மோடி என மாற்றியிருக்கிறார். நாங்கள் இவ்விவகாரத்தை மேல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம்” என காந்தியின் வழக்கறிஞர் கிரித் பவாலா தெரிவித்துள்ளார். (Image Credit: PTI)