IndiaNews & Analysis

இந்தியா – உலகின் நான்காவது பலமான இராணுவத்தைக் கொண்டது

கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு இலங்கையிலுள்ள முன்னணி முஸ்லிம் அமைப்பொன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.  இவ் விடயம் தொடர்பாக அது உலக முஸ்லிம் அமைப்புகளான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு  மற்றும்  உலக முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றைத் தலையிட்டு பொருத்தமான நிலமொன்றைப்  பெற்றுத்தரும்படி வேண்டுகோள்  விடுத்துள்ளது. 

சிறிலங்கா இஸ்லாமிய நடுவமே உலக அமைப்புக்களுக்கு இம் முறைப்பாட்டைச் செய்துள்ளது. உலக முஸ்லிம் காங்கிரஸில் அங்கத்துவ அமைப்பான இஸ்லாமிய நடுவம், இதன் மூலம் இலங்கை பற்றிய முறைப்பாட்டை உலக இஸ்லாமிய நாடுகளுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளது. இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய வற்புறுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஜெனிவாவிலுள்ள உலக முஸ்லிம் காங்கிரஸிடம் அது கேட்டுள்ளது.

கொழும்பிலுள்ள குப்பியவத்த இடுகை நிலம் மற்றும் மன்னாரில் மசூதி ஒன்றிற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் ஆகியவற்றைத் தமது தேவைக்காகப் பரிசீலிக்கும்படி முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. இந் நிலங்களில் நிலக்கடி நீர் மற்றிய ஆய்வறிக்கைகளை ஏற்கெனவே பேராதனைப் பல்கலைக்கழக நிலவியல் நிபுணர்கள் தயாரித்துவைத்துள்ளனர். இவற்றில் மன்னார் நிலம் தாழ்ந்த மண்ணீர மட்டத்ஹைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மன்னாரிலுள்ள இக் குறிப்பிட்ட நிலத்துக்குரியவர்கள் அடக்கங்கங்களைச் செய்வதற்குத் தயாராகவிருந்தனரெனவும் அதை ஏன் சுகாதார அதிகாரிகள் நிராகரித்தநர் எனவும் தமக்குத் தெரியாது என முஸ்லிம் தரப்பு தெரிவித்துள்ளது.

இதே வேளை, நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்துப்படி இரணைதீவு நிலத்தில் அடக்கம் செய்வதற்கான நிலவியல் ஆய்வு செய்யப்பட்டதாகத் தனக்குத் தெரியாது எனக் கூறியதாகத் தெரியவருகிறது. அத்தோடு, வடக்கிலொன்றும் கிழக்கிலொன்றுமாக, ஆழ் மண்ணீர் மட்டங்களைக் கொண்ட  இரண்டு நிலங்களைத் தான் நிபுணர் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.