HealthIndia

இந்தியாவும் பயணத்தடையை அறிவித்தது | உலக சுகாதார நிறுவன அறிவிப்பின் எதிரொலி!

. பயணத்தடை ஏப்ரல் 15 வரை நடைமுறையில் இருக்கும்
. ஏற்கெனவே வழங்கப்பட்ட நுழைவு அனுமதிகள் மீளப்பெறப்பட்டுவிட்டன

மார்ச் 12, 2020

கொறோனாவைரஸ் தொற்று ஒரு எல்லை கடந்த கொள்ளை நோய் (pandemic) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா தனது எல்லைகளுக்குள் சில நாடுகளின் குடிமக்கள் நுழைய முடியாதென நேற்று அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று இந்தியாவும் தனது எல்லைகளுக்குள் வேற்றுநாட்டுக் குடிமக்கள் வர முடியாதெனத் திடீர் அறிவிப்பை விடுத்துள்ளது. இந்தியாவிற்குள் நுழைவதற்கென ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த நுழிவு அனுமதிகளையும் அது மீளப்பெற்றிருப்பதாக அறியப்படுகிரது.

இப் பயணத்தடை ஆப்ரல் 15 வரை நடைமுறையிலிருக்கும் எனவும் இக் காலத்தில் இந்தியாவின் அனைத்து எல்லைகளும் மூடப்படும் எனவும் இந்திய மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நோய்த்தொற்றுச் சட்டம் 1897 (Epidemic Diseases Act, 1897) இன் பிரகாரம் இந்தியாவின் சகல் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இப் பயணத்தடையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவிட்-19 நோய்ப் பரம்பலை அவதானித்து அதைக் கட்டுப்படுத்தவென உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழு சந்தித்த கூட்டமொன்றின் போது இம் முடிவு எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இப் பயணத் தடையின் காரணமாக, ஒரு மாதத்துக்கு இந்தியாவிற்குள் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் எவரும் நுழைய முடியாது. இதனால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் பேசப்படுகிறது.