இந்தியாவுடன் நெருக்கமாகும் இலங்கை | கோதாபயவின் முதல் ராஜதந்திர வெற்றி? -

இந்தியாவுடன் நெருக்கமாகும் இலங்கை | கோதாபயவின் முதல் ராஜதந்திர வெற்றி?

பாதுகாப்புக்கு US$ 50 மில்லியன், பொருளாதார மேம்பாட்டிற்கு US$ 400 மில்லியன் கடனுதவிகள்

நவம்பர் 29, 2019

ஜனாதிபதியாகப் பதவியேற்றுத் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அயலிலுள்ள இந்தியாவுக்குச் சென்றிருந்த கோதாபய ராஜபக்ச வெற்றிகளை ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இப் பயணத்தின்போது பாதுகாப்புத் தேவைகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்காக 400 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகவும் வழங்குவதற்கு பிரதமர் மோடியின் அரசு இணங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் புதிய அணுகுமுறையைக் கைக்கொள்வது அவசியம் எனவும் இவ் விடயத்தில் பிரதமர் மோடியின் உதரவாதம் நம்பிக்கை தருவதாகவும் இச் சந்திப்பின் பின்னான ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோதாபய தெரிவித்தார்.

அதே வேளை, இந்திய மீனவர்கள் விவகாரம் பேச்சுவார்த்தையில் முக்கிய பேசுபொருளாக இருந்தது என்றும் இலங்கையில் தடுப்பிலிருக்கும் இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க இணக்கம் காணப்பட்டதெனவும் அறியப்படுகிறது.

அதே வேளை, இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு வரவிருப்பதாகவும், கோதாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின் இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு அதிபர் என்ற பெருமை அவரைச் சாரும் எனவும் தெரிகிறது.

‘அயலவர்களுக்கு முன்னுரிமை’ கொடுக்கும் இந்தியாவின் அணுகுமுறையில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனச் இச் சந்திப்பின் பின்னர் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும், குறிப்பாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா அனுசரணையாகவிருக்கும். அதற்காக US$ 50 மில்லியன்களைக் கடனாக இந்தியா வழங்கும்.

ஜனாதிபதி ராஜபக்சவுடனான சந்திப்பு மிகவும் பலனுள்ளதாக அமைந்ததென்றும், பலமானதும் செழிப்பானதுமான இலங்கை, இந்தியவுக்கு மட்டுமல்ல இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கே நல்லது எனவும் இக் காரணங்களுக்காக இலங்கைக்கு இந்திய உதவி வழங்கப்படுமெனவும் பிரதம்ர் மோடி தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  2/3 பெரும்பான்மை கிடைத்தால் 19வது திருத்தம் மாற்றப்படும் - ஜனாதிபதி ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)