Spread the love

மின்வாகனத் தயாரிப்பில் வெற்றிகரமான அமெரிக்க நிறுவனமான ரெஸ்லா தற்போது இந்தியாவிலும் தனது தடத்தைப் பதிக்கிறது.

ஜனவரி 8ம் திகதி பங்களூரில் Tesla Motors and Energy Pvte Ltd. என்ற பெயரில் பதியப்பட்ட இந் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக வைபவ் ரனெஜா, வெங்கறங்கம் சிறீராம், டேவி ஜொன் ஃபீன்ஸ்டீன் ஆகியோர் இருப்பார்கள்.

அதே வேளை, மஹாராஸ்டிரம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தமது தொழிற்சாலைகளையும், ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவுவதற்கென அம் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ரெஸ்லா ஈடுபட்டு வருகிறது.

ரெஸ்லாவின் ‘மொடெல் 3‘ வாகனத்தை இந்தியாவில் தயாரித்து அதை 60 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு விற்பதற்கு, நிறுவன ஸ்தாபகரான இலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

ரெஸ்லா நிறுவனன் தமது மாநிலத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விக்கப்பட்டுள்ளதென்றும், அதற்காக சில நிலங்களைத் தாம் ஏற்கெனவே ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கர்நாடக அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Print Friendly, PDF & Email