HealthIndiaNews & Analysis

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 2 இலட்சம் கோவிட் தொற்று, 1,000 மரணங்கள்!

இந்தியாவின் இரண்டாம் அலையென வர்ணிக்கப்படும் கோவிட் தொற்று கடந்த 24 மணித்தியாலங்களில் 2 இலட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இதே கால கட்டத்தில் இந் நோயினால் மரணமடைந்தோர் தொகை 1,000 த்தைத் தாண்டியிருக்கிறது.

ஒருநாட் தொற்றான 200,739 உடன், இந்தியாவின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 14,074,564 என சுகாதார அமைச்சின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டெல்ஹி, ஹர்யானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இரவுநேர ஊரடங்குச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தியாவின் மிக மோசமான தொற்றுள்ள மாநிலமாக அறிவிக்கப்பட்ட மஹாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் நகர் முடக்கம், பகல் நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடமுடியாது எனப்படும் சட்டம் ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே வேளை, தடுப்பு மருந்தை எடுக்கக்கூடியவர்களை அதை உடனடியாக எடுக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

13வது நாளை எட்டிக்கொண்டிருக்கும்,ஹரித்துவாரில் கங்கைக் கரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கும்பமேளத் திருவிழா நாளொன்றுக்கு 1000 த்துக்கும் மேற்பட்ட தொற்றுக்கள் களுக்குப் அறியப்பட்டதாக ஆரம்ப நாட்களில் கூறப்பட்டது. இதில் பங்குபற்றுபவர்கள் தத்தம் கிராமங்களுக்குத் திரும்பும்போது அங்கு நோய்த்தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் நிறையவுண்டு என மருத்துவ சமூகம் எச்சரித்துள்ளது.