இந்தியாவின் சந்திரப் பிரவேச முயற்சி தோல்வி
‘விக்ரம்’ இறங்கு கலம் தொடர்புகளை முறித்துக்கொண்டது
இந்தியாவின் சந்திரயான் -2 விண்வெளி யாத்திரையில் இன்று பாரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது. 1.3 பில்லியன் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த விக்ரம் எனப் பெயரிடப்பட்ட இறங்கு கலம் சந்திரனின் தரையைத் தொடுவதற்கு சில விநாடிகளே இருக்கும் தருணத்தில் தொடர்புகளை முறித்துக்கொண்டு விட்டது.
‘இறங்கு கலத்தின் பாதையும் பயணமும் எமது தீர்மானத்தின்படியே இருந்தது என கட்டளைத் தலைமயகத்திலிருந்து இப் பயணத்தின் தலைமையதிகாரியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organaisation (ISRO)) தலைவருமான கைலாசவடிவு சிவன் அவர்கள் தெரிவித்தார்.

“சந்திரனின் தரையிலிருந்து 2.1 கி.மீ. வரை இறங்கு கலத்தின் பயணம் எதிர்பார்த்தது போலவே இருந்தது. பின்னர் சடுதியாக அதற்கும் எமக்குமிடையிலான தகவற் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. காரணத்தைத் தேடி அது அனுப்பிய தரவுப் பதிவுகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்” என்றார் அவர்.
இறங்கு கலம் தாய்க்கலத்திலிருந்து பிரிந்த போதும் பின்னர் அதன் இறங்கு வேகத்தைக் குறைத்து மென்மையான தரயிறக்கத்துக்காக முதலாவது கட்டத் தயாரிப்பின் போதும் அதன் இயக்கம் சரியாகவே இருந்தது. ஆனால் அதன் இரண்டாவது கட்டத் தயாரிப்பின் பின்னரே பிரச்சினை உருவாகியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சந்திரப் பிரவேசத்தைத் தரிசிக்க கட்டளைப் பணியகத்தில் சமூகமளித்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் ஆறுதல் கூறி, நடந்த சம்பவத்தால் மனமுடைந்து போகவேண்டாமென்றும் தொடர்ந்து துணிச்சலோடு பயணிக்கும்படியும் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ரஸ்யா, சீனா ஆகிய நாடுகள் தமது கலங்களைச் சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் -2 இன் தோல்வி குறித்து பாகிஸ்தான் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பவாட் சவுத்ரி யின் கீச்சல் இப்படியிருந்தது…..
