இந்தியாவின் அனுசரணையுடன் இயங்கும் 265 இணையத் தளங்கள் போலிச் செய்திகளை வழங்குகின்றன - ஆய்வு -

இந்தியாவின் அனுசரணையுடன் இயங்கும் 265 இணையத் தளங்கள் போலிச் செய்திகளை வழங்குகின்றன – ஆய்வு

65 நாடுகளில் இயங்குகின்றன

அமெரிக்கா, கனடா, பிரஸ்ஸெல்ஸ், ஜெனீவா உள்ளிட்ட 65 நாடுகளில் இருந்து வெளியாகும் 265 இணையத்தளங்கள் போலிச் செய்திகளை வெளியிடுகின்றன எனவும் இவை பாகிஸ்தான் மீதான அவப்பெயரை வேண்டுமென்றே பரப்புவதற்காக இந்தியாவின் அனுசரணையுடன் அதன் வலையமைப்புக்களால் நிர்வகிக்கப்படுகின்றன எனவும் EU DisinfoLab என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உதாரணத்திற்கு, newyorkmorningtelegraph.com, thedublingazette.com, or timesofportugal.com போன்ற பெயர்களில் இவ்விணையத் தளங்கள் மேற்கு நாடுகளில் இருந்து வெளியிடப்படுகின்றன.

அக்டோபர் மாதம் பிரஸ்ஸெல்ஸ் இல் இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான இணையத்தளமெனத் தம்மை அழைத்துக்கொள்ளும் eptoday.com, றஸ்யா ருடே மற்றும் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா போன்ற செய்தி ஊடகங்களின் செய்திகளை மறு பதிப்புச் செய்திருந்தன. இதில் பல தலையங்கங்கள், கட்டுரைகள் பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை இனத்தவரைக் குறிவைத்தும், வேறு பல இந்தியா சார்ந்த செய்திகளையும் வெளியிட்டிருந்தன என ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிக்குழு ஒன்று கண்டுபிடித்திருந்தது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட EU DisinfoLab, ஈபி ருடே இணையத் தளத்தைப் பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் சிறிவஸ்தாவா குழுமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் நிறுவனங்கள் என்பதைக் கண்டுபிடித்தது. அதே வேளை சிறிவஸ்தாவா குழுமத்திற்குச் சொந்தமான IP address ஐயே இன்னுமொரு இணைய ஊடகமான ‘New Delhi Times’ மற்றும் ‘the International Institute for Non-Aligned Studies (IINS)‘ அமைப்பு ஆகியன பாவித்து வருகின்றன எனவும் இவ்விரண்டு நிறுவனங்களும் நியூ டெல்ஹியில் ஒரே விலாசத்தில் இருந்து இயங்குகின்றன எனவும் EU DisinfoLab கண்டுபிடித்தது.

சில வாரங்களுக்குப் பிறகு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 27 பிரதிநிதிகளைக் காஷ்மீருக்கு அழைத்து பிரதமர் மோடியைச் சந்திக்க IINS ஒழுங்குசெய்திருந்தது.

இதன் பின்னர் OSINT (Open Source Intelligence Techniques) தொழில்நுட்பத்தைப் பாவித்து மேலும் ஆய்வுகளைச் செய்தபோது இவ் வலையமைப்பு ஜெனிவாவில் ஐ.நா.வின் அகதிகள் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் செல்வது தெரியவந்தது. அங்கு ’35 வருடமாகச் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும்’ timesofgeneva.com என்ற இணையத்தளம் இயங்கி வருவது தெரியவந்தது. இந்த இணையத்தளமும் EP Today இணையத்தளம் வெளியிடும் செய்திகளையே பிரதிசெய்துகொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை காஷ்மீரில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கும் காணொளிகள், ஊர்வலங்கள் பற்றிய செய்திகளாகவே இருந்தன.

EP Today மற்றும் Times of Geneva போன்ற இணையத் தளங்களுக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Pakistani Minorities (EOPM)) மற்றும் பாகிஸ்தான் பெண்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு (Pakistani Women’s Human Rights Organization ) ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்ததையும் EU DisinfoLab கண்டுபிடித்தது. இவ்வமைப்புகள் எல்லோரும் பெரும்பாலும் ஒரே சேர்வர்கள், டொமெயின் பதிவுகள் மற்றும் பணியாளர்களைக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

Related:  இந்தியாவுடன் நெருக்கமாகும் இலங்கை | கோதாபயவின் முதல் ராஜதந்திர வெற்றி?

ஐரோப்பிய ஒன்றியம், ஜெனிவா போன்ற தளங்களைக் கொண்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா. அமைப்புக்கள் போன்றவற்றை லொபி செய்வது அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.

இதே நடைமுறைகளைப் பாவித்து விசாரணைகளை மேற்கொண்டதில் 265 இணையத் தளங்கள் 65க்கும் மேலான நாடுகளில் இருந்து இயங்கிக்கொள்வது தெரியவந்தது. அவை ஏதோ வழியில் EP Today, சிறிவஸ்தாவ குழுமத்துடன் தொடர்பு பட்டவையாகவுமே உள்ளன என EU DisinfoLab கூறுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)