இந்தியர்கள் அனைவரும் ராஜபக்ச அரசை ஆதரிக்கிறார்கள் – சுப்பிரமணியன் சுவாமி
“இந்தியாவைப் பொறுத்தவரை முன்னர் நான் மட்டுமே இலங்கையை ஆதரித்து வந்தேன் இப்போது ஏறத்தாள அனைத்து இந்தியர்களுமே இலங்கை வெற்றி பெறவேண்டுமென்று விரும்புகிறார்கள்” என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவுடனான நிகழ்ச்சியொன்றில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்தும் ‘தாசதேசின் ஹதா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது ” இலங்கை இல்லாமல் எங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளுமென்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ராஜபக்ச அரசாங்கம் தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து வெற்றிகரமாக வெளியேற வேண்டுமென நாம் விரும்புகிறோம். தொடர்ந்து முயற்சியுங்கள், நீகள் வெற்றி பெறுவீர்கள்” என சுவாமி தெரிவித்தார்.
“சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவைத் நான் பாராட்டுகிறேன், 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியா இப்படியான நிலைமைக்குள் தள்ளப்பட்டபோது தம்மை US $ 2 பில்லியன் உதவியுடன் சர்வதேச நாணைய நிதியமே காப்பாற்றியது. சில துர்ப்பாக்கிய நிகழ்வுகளால் இலங்கை இந் நிலைமைக்குள் தள்ளப்பட்டு விட்டது. இதுவெல்லாம், என்னைப் பொறுத்தவரை, திருத்தப்படக்கூடிய பின்னடைவுகள். தொடர்ந்து செல்வதற்கு உறுதி அவசியம்” அவர் மேலும் தெரிவித்தார்.