• Post category:Humour / INDIA
  • Post published:November 5, 2019
Spread the love

“இந்தியப் பசுப் பாலில் தங்கமிருக்கின்ற படியால்தான் அது மஞ்சள் நிறத்திலிருக்கிறது” என பேர்ட்வான் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் டிலிப் கோஷ் கூறியது தற்போது வலைத் தளங்களில் நகைப்புக்கிடமாகியிருக்கிறது.

“வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பசுக்களில் இல்லாத கூனல்கள் (humps) இந்தியப் பசுக்களில் இருக்கிறது. வெளிநாட்டுப் பசுக்களின் முதுகுகள் நேரானவை. இந்தியப் பசுக்களின் கூனல்களில் ‘ஸ்வர்ணநாரி’ என்னும் நாடி (gold artery) இருக்கிறது. இதில் சூரிய வெளிச்சம் படுகின்றபோது தங்கம் தயாரிக்கப்படுகிறது. இதனால் பாலின் நிறம் மஞ்சளாக மாறுகிறது” என அவர் தனது தகவலுக்கான வியாக்கியானத்தையும் கொடுத்தார்.

“எமது பசுக்களின் பாலுக்கு நோய்த் தடுப்புக் குணங்களுண்டு. இப் பாலுடன் மட்டுமே ஒருவர் வாழ முடியும். வேறொண்றும் சாப்பிடத் தேவையில்லை. இது ஒரு பூரண உணவு” என அவர் மேலும் தெரிவித்தார்.

அப்படிப் பார்க்கில் காவிகளுக்குள் இருக்கும் தங்கம் இன்னும் அதிகமாகவிருக்கும் போலவிருக்கிறதே. அதற்குள் இருக்கும் ‘ஸ்வர்ண நாறி’ என்னும் ஒரு வகையான வியர்வைப் பதார்த்தம் இருப்பதனால்தான் என வியாக்கியானத்துடன் இன்னுமொரு காவி வருவதற்குள் மாறி விடுவோம்….

-மாயமான்

Print Friendly, PDF & Email