இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண்
30 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறிய இலங்கைத் தம்பதிகைன் மகள் செவ்மி தாருகா பெர்ணாண்டோ, இத்தாலிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார்.
அழகு கலாச்சாரக் கல்வியில் டிப்ளோமாவைப் பெற்றிருக்கும் 20 வயதுடைய தாருகா, ‘மொடல்’ ஆகப் பணிபுரிகிறார்.

அவர் வசிக்கும் வெனேற்றோ மாகாணத்தின் அழகுராணியாக முடிசூடப்பட்டிருந்த தாருகா நேற்றிரவு நடைபெற்ற இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். பிராந்தியங்களிலிருந்து பங்கு பற்றிய 187 பேரில் இருந்து தெரிவாகிப் பின்னர் நேற்றிரவு பங்கு பற்றிய 80 பேர்களில் இருந்தும் தெரிவாகி இறுதிச் சுற்றுக்குச் செல்கிறார்.
அவருடைய நிறத்துக்காக அவர் பல தடவைகள் சில இத்தாலியர்களிடமிருந்து துவேஷப் பழிகளுக்கு ஆளாகியும் தன் முயற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து பங்குபற்றி வருகிறார் என்பது பெருமைக்குரியது.
“நான் இன பேதத்துக்கு எதிராகப் போட்டியிடுகிறேனே தவிர, இதர போட்டியாளர்களுக்கு எதிராக அல்ல” என்று கூறுகிறார் தாருகா.
இதற்கு முன்னர் 2012 இல் 18 வயதுடைய நயோமி அண்டிபடுகே என்ற இலங்க வம்சாவளிப் பெண்ணும் இத்தாலி அழகுராணிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.