ஆபிரிக்காவில் வரலாறு காணாத பட்டினி – ஐ.நா.

Spread the love

ஆபிரிக்காவில், சகல துன்பங்களையும் பெண்களும் குழந்தைகளுமே தாங்கவேண்டியிருக்கிறது

உலக உணவுத் திட்ட அதிகாரி

ஜனவரி 16, 2020

பருவநிலைக் குழப்பங்களால், தெற்கு ஆபிரிக்காவில் முன்னெப்போதும் காணாத அளவுக்கு வறுமை தலைதூக்கியுள்ளது என ஐ.நா. எச்சரிக்கிறது.

ஆபிரிக்காவின் பருவங்களின் பழிவாங்கல்

பல வருடங்களான வரட்சி, வெள்ளம், பொருளாதாரச் சீர்கேடு போன்ற விடயங்களால் தெற்கு ஆபிரிக்காவின் 45 மில்லியன் மக்கள், குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும், கடுமையான உணாவுப் பற்றாக்குறைக்கு ஆளாகப்போகின்றனர் என உலக உணவுத் திட்டம் கூறுகிறது.

சிம்பாப்வேயிலுள்ள 7.7 மில்லியன் மக்களில் அரைவாசிக்கு மேல் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.


இப் பிராந்தியத்தின் ‘உணவுக்கூடை’ எனப் புகழப்படும் சாம்பியாவில் 20% மக்களும், லெசோத்தோ, நமிபியா போன்ற நாடுகளில் குறைந்தது 10% மக்களும் உணவுப் பற்றாக்குறைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பரந்தளவு கால்நடையழிவுகள், உணவு விலையேற்றம் ஆகியன நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளன.

தெற்கு ஆபிரிக்காவிலுள்ள 16 நாடுகள், கடந்த 5 வருடங்களில் ஒரே ஒரு போக விளைச்சலையே கண்டுள்ளனவெனெ, காலநிலை மாற்றத்துக்கான குழு தெரிவிக்கிறது. பருவ மழை பொய்த்துப் போனதால் அடுத்த அறுவடை 60% வீழ்ச்சியைக் காணும் என ஐ.நா. நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

மத்திய, மேற்குப் பிரதேசங்கள், கடந்த 35 வருடங்களாக மிக மோசமான வரட்சியைக் கண்டு வருகின்றன. சென்ற வருடம் புயலினால் ஏற்பட்ட தாக்கம் வரலாற்றிலேயே காணப்படாதது. அதற்குள் அடுத்த சூறாவளிப் பருவம் ஆரம்பித்துவிட்டது. சென்ற வருடத்து அழிவு மீண்டும் புதுப்பிக்கப்படப் போகின்றது என உலக உணவுத் திட்டத்தின் லோலா காஸ்ட்றோ கூறுகிறார்.

சென்ற மார்ச் மாதம், சூறாவளி காரணமாக, மொசாம்பிக், மாலாவி, சிம்பாப்வே போன்ற நாடுகளில் 900 க்கும் மேலான மக்கள் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்படுகின்றனர். அடுத்த 6 வாரங்களுக்குள் இன்னுமொரு சூறாவளி மொசாம்பிக்கைத் தாக்கியிருக்கிறது.

மிகவும் போசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளான சிம்பாப்வே, சாம்பியா, மொசாம்பிக், மடகாஸ்கார், நமிபியா, லெசோத்தோ, எஸ்வதினி (முன்னாள் சுவாசிலாந்து), மலாவி ஆகிய நாடுகளிலுள்ள 8.3 மில்லியன் மக்களுக்கு, உலக உணவுத் திட்டம் சிறு உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  மொசாம்பிக் | கொள்கலனுள் 64 பேர் மரணம்!

Leave a Reply

>/center>