ஆகஸ்ட்டில் மாகாணசபைத் தேர்தல்கள்?

இலங்கையின் மாகாணசபைத் தேர்தல்கள் இந்த வருடம் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

தேர்தல்களை நடத்துவதற்கான விதி முறைகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் பழைய முறைகளுடன் சில புதியனவும் இணைக்கப்படுமெனவும் தெரிய வருகிறது.

இத்்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளர் பட்டியலில் 25% த்தைப் பெண்களுக்கும் இளையவர்களுக்கும் கொடுக்கவிருக்கிறது எனவும் தெரிய வருகிறது.