Spread the love

அவொன் – கார்ட் (avant-garde) மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் கோதாபய ராஜபக்சவைக் கைதுசெய்ய எடுத்த முயற்சியைத் தனது தலையீட்டால் முன்னாள் ஜனாதிபதியும் (சிறிசேன), பிரதமரும் (ரணில்) தடுத்து நிறுத்தினார்கள் என முன்னாள் நீதியமைச்சரும், தற்போதய பொதுஜன் பெரமுன வேட்பாளருமான டாக்டர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் இலங்கை இராணுவத்தளபதி மேஜர் நிசாங்கா சேனாதிபதியைத் தலைவராகக் கொண்டு இயங்கிய இந் நிறுவனம், அப்போதய பாதுகாப்பு அமைச்சர் கோதாபய ராஜபக்சவின்கீழ், அமைச்சின் தனியார் இராணுவ பாதுகாப்பு நிறுவனமாக இயங்கி வந்தது. மாலைதீவில் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற சதியில் இந் நிறுவனம் ஈடுபட்டதென அப்போது சந்தேகிக்கப்பட்டது.

2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இக் கப்பல் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்பது தவறு எஅனவும் , கடற்பரப்புச் சட்டங்களின்படி 12 கி.மீ. இற்கு அப்பாலேயே நங்கூரமிட்டிருக்கவேண்டுமென சிறீசேன அரசினால் கூறப்பட்டது.

அதே வேளை, கடற்படைக்குப் போகவேண்டிய ஒப்பந்தங்களை கோதாபய, சேனாதிபதி ஆகியோர், இந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது தொடர்பான ஊழற் குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்படவேண்டுமென, அப்போதய அமைச்சர் சரத் பொன்சேகா, சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அனுரகுமார திசநாயக்கா, சட்டத்தரணி ஜே.சி. வெலியாமுன ஆகியோர் முயற்சி எடுத்தனர்.இதை அறிந்த நான் நேரடியாகச் சென்று ஜனாதிபதி சிறீசேன மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரை வற்புறுத்தி கோதாபய கைதாவைதைத் தடுத்து நிறுத்தினேன் என ஊடகவியலாளர் சமுத்தித சமரவிக்கிரம நடத்தும் சிங்கள அரசியல் நிகழ்ச்சியான ‘சலகுண’வில் விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

அவோன் -கார்ட் மரிரைம் சேர்விசெஸ் (Avant Garde Maritime Services (AGMS)) என்னும் நிறுவனத்தின் மூலம் கடல் கடந்த பாதுகாப்புச் சேவைகளை வழங்கி, கோதாவும் அவரது நண்பர் சேனாதிபதியும் பணமீட்டினார்கள் என்பதே சம்பிக்க ரணவக்க போன்றோரது குற்றச்சாட்டு.

அவோன் – கார்ட் அப்போது பாதுகாப்பு அமைச்சின் பிரத்தியேக நிறுவனமாக இயங்கியபடியால், தேசிய பாதுகாப்பு சபையின் பணிப்புகளின் பேரில்தான் அது தனது விவகாரங்களை மேற்கொண்டது எனவே முழு பாதுகாப்புச் சபையையும் கைதுசெய்யவேண்டும் எனத் தான் வாதாடியதால் சிறீசேனவும், ரணிலும் அம்முயற்சியைக் கைவிட்டடனர் என விஜேதாச இன் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ராஜபக்ச ஆட்சி, சீனாவின் நடைமுறைகளைப் பின்பற்றி, முப்படைகளும் வருமானமீட்டக்கூடிய ஒப்பந்தங்களைத் தனியாருடன் செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

நல்லாட்சி அரசிலிருந்த சில முக்கிய அரசியல்வாதிகள், அட்டோர்ணி ஜெனெரல் அலுவலகத்தை வர்புறுத்தி கோதாபய ராஜபக்சவைக் கைதுசெய்ய முயன்றார்கள் என விஜேதாச இன் நிகழ்ச்சியின்போது கூறினார்.

Related:  Neville D Jayaweera – The Vicissitudes


அதே வேளை, டாக்டர் சேனாரத்னவும் அரச திணைக்களங்களுடன் தனது பிரத்தியேக வியாபாரங்களைச் செய்துவந்தார் எனவும் அதனால் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் எனவும் விஜேதாச குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசின் போது மிக முக்கியமான ஆலோசகர்களாக ஆர். பாஸ்கரலிங்கம், சரிதா ரத்வத்த, மாலிக் சமரவிக்கிரமா ஆகியோர் பணியாற்றியிருந்தார்கள் எனவும் விஜேதாச குறிப்பிட்டார்.

டாக்டர் விஜேதாச ராஜபக்ச இந்தத்தடவை பொதுஜன பெரமுனகட்சிக்குத் தாவி, கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் நிற்கிறார். ரணில் விக்கிரமசிங்க மிக நீண்ட காலமாக இம் மாவட்டத்தில் மட்டுமல்ல, இலங்கையிலேயே தொடர்ச்சியாக, அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி வருபவர்.

Print Friendly, PDF & Email