Spread the love

இறுதிநேர நீதிமன்றத் தலையீடு காரணமாகக் குடும்பம் பயணித்த விமானம் தரையிறக்கப்பட்டது

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கேட்டிருந்த தமிழ்க் குடும்பமொன்றின் நாடுகடத்தல் இறுதி நேர நீதிமன்றத்தின் தலையீட்டால் தடுக்கப்பட்டது. அவுஸ்திரேலிய நேரம், வியாழன் இரவு இக் குடும்பத்தை ஏற்றிக்கொண்டு பறந்த விமானம் நீதிமன்ற உத்தரவால் திருப்பியழைக்கப்பட்டுத் தரையிறக்கப்பட்டது. நான்கு பேரைக் கொண்ட குடும்பம் மெல்போர்ணிலிருந்து சிறீலங்காவுக்கு வியாழன் இரவு 11 மணிக்கு, விசேட விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படிருந்தனர்.

அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தின் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது! 1
நடேசலிங்கம் குடும்பம்

ஆனால் நீதிபதி ஒருவரின் இறுதிநேரத் தலையீட்டினால், அவர்களது நாடுகடத்தலுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. திருப்தியழைக்கப்பட்ட விமானம் டார்வின் விமானத்தளத்தில் வெள்ளி அதிகாலை வந்திறங்கியது.

பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம், அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் ஆகியோர் உறவினர் ஒருவர் வீட்டுக்கௌ அழைத்துச் செல்லப்பட்டனர்.

“இக் குடும்பம் அகதி அந்தஸ்த்துக்குரியவர்களோ அல்லது அவுஸ்திரேலியா அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய தேவையோ இல்லை” என உள்விவகார அமைச்சர் பீற்றர் டற்றன் கூறினார். இவர் ஒரு லிபரல் கட்சியைச் சேர்ந்த வலத்துசாரி அரசியல்வாதி ஆவார்.

குடிவரவு அதிகாரிகள் இக்குடும்பத்தின் வழக்கைப் பல்லாண்டு காலமாக ஆராய்ந்தனர். உயர் நீதிமன்றம் உட்படப் பல நீதிமன்றங்கள் இவ்வழக்கை விசாரித்து அவர்கள் அகதி அந்தஸ்துக்கு ஏற்றவர்கள் அல்லர் எனத் தீர்மானிக்கபட்டிருந்தது.

அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தின் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது! 2
நாடுகடத்தலுக்கு எதிராகத் திரண்ட அவுஸ்திரேலியர்கள்

மெல்போர்ணிலுள்ள மத்திய சுற்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இக்குடும்பத்தின் நாடுகடத்தல் உத்தரவை நிறுத்தக் கோரி வழக்குத் தொடுந்திருந்தார்கள். இதை விசாரித்த நீதிபதி ஹெதெர் றைலி நாடுகடத்தலை உடனடியாக நிறுத்துமாறு உதரவிட்டார்.

இக் குடும்பத்தின் நாடுகடத்தலை நிறுத்துமாறு கோரி அவர்கள் வாழ்ந்த கிராமமான பிலோஎலா மக்கள் பல முயற்சிகளை எடுத்திருந்தனர்.

பிரியாவும் நடேசலிங்கமும், தனித்தனியாக, 2012, 2013 களில், படகுகளின் மூலம் அவுஸ்திரேலிய கரையை வந்தடைந்திருந்தனர். மார்ச் 2018 இலிருந்து அவர்கள் வசித்து வந்த குயீன்ஸ்லாந்து, பிலோஎலா வீட்டிலிருந்து அகற்றப்பட்டு, மெல்போர்ண் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். தற்காலிக அனுமதியுடன் அவர்கள் அவ்வீட்டில் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தனர்.

சென்ற வாரம் அவர்களுடைய அடைக்கல முயற்சி முடிவுக்கு வந்தது. பிலோஎல கிராம மக்கள் அவர்களை நாடுகடத்த வேண்டாமெனவும் நாடுகடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் குடிவரவு அமைச்சரைக் கேட்டிருந்தனர்.

பிரியா குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனியாக விமான நிலையத்துக்கு மாலை 7:30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குடும்பம் மீளிணைக்கப்பட்டது. விடயமறிந்த சுமார் 50 ஆதரவாளர் விமான நிலையத்துக்கு விரைந்து நாடுகடத்தலை நிறுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இரண்டு பெண்கள் விமான நிலையத்தின் வேலிகளை முறித்துக்கொண்டு உள்ளே சென்றதற்காக வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வேலியை விட்டிக்கொண்டு விமான ஓடுபாதைக்குள் பிரவேசித்ததாக தமிழ் அகதிகள் சபையைச் சேர்ந்த ஆரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

Related:  இலங்கையில் மனித உரிமைகளுக்குப் பின்னடைவு - பிரித்தானிய பாராளுமன்ற அறிக்கை

இக் குடும்பத்தை நாடுகடத்தலுக்கு எதிராகப் பல அவுஸ்திரேலிய மக்கள் ஆதரவு நல்கியிருந்தனர். 200,000 பேர் change.org இணையத்தின் மூலம் கையெழுத்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

Print Friendly, PDF & Email