அவுஸ்திரேலிய காட்டுத் தீ | இருவர் பலி! -

அவுஸ்திரேலிய காட்டுத் தீ | இருவர் பலி!

நவம்பர் 8, 2019

அவுஸ்திரேலிய காட்டுத் தீ

வரட்சி காரணமாக கிழக்கு அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ இருவரைப் பலிகொண்டுள்ளதாகவும் 7 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அறியப்படுகிறது. நூற்றுக்கும் மேலான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

சிட்னியிலிருந்து 550 கி.மீ. வடக்கேயுள்ள கிளென் இன்னெஸ் நகரத்தில் இருவர் மரணமடைந்துள்ளனரென்பதை நியூ சவுத் வேல்ஸ் கிராமிய தீயணைப்புச் சேவைகள் உறுதிசெய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் மிக மோசமான வரட்சியை எதிர்கொண்டுள்ள இவ் வேளையில் இக் காட்டுத்தீ இவ் வருடத்தின் அதியுச்ச அழிவையும் ஏற்படுத்தியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பருவகாலத்துக்குரிய சராசரியைவிட அதிகமான வெப்பநிலையும் குறைவான மழைவீழ்ச்சியும் இம் மோசமான விளைவுகளுக்குக் காரணமெனத் தெரிகிறது.

மாநிலத்தில் 70 க்கும் அதிகமான இடங்கள் தீபிடித்து எரிந்துகொண்டிருக்கின்றன என்றும் அவற்றில் இரண்டுக்கு பொதுமக்கள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதெனதும் தெரிகிறது.

மேலும் வடக்கேயுள்ள குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் கடற்கரை நகரமான நூசாவில் ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பு வாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

வரட்சி காரணமாகக் காற்றின் பலத்தைப் பொறுத்து தீ எந்த நேரமும் திசை மாறலாம் என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

Please follow and like us:
error0