அவுஸ்திரேலிய ஓப்பிண்: ரஃபேல் நடாலின் 21 ஆவது கிராண்ட் ஸ்லாம் சாதனை!

அவுஸ்திரேலிய ஓப்பிண் 2022 ரென்னிஸ் சுற்றுப்போட்டியில் ஸ்பானிய ஆட்டக்காரரான ரஃபேல் நடால் வெற்றியை ஈட்டியதன் மூலம் 21 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்ற சாதனையைத் தன்னகப்படுத்தியுள்ளார். கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா (விம்பிள்டன்) மற்றும் அமெரிக்க ஒப்பிண் சுற்றுப்போட்டிகள் அனைத்திலும் வெற்றிபறுபவர் கிராண்ட் ஸ்லாம் வெற்றியைப் பெற்றவராகக் கருதப்படுவார். அந்த வகையில் அவுஸ்திரேலிய ஓப்பிஒண் வெற்றியின் மூலம் நடால் ரோஜெர் ஃபெடெரெர், நோவாக் ஜோகோவிச் ஆகியோரைப் புறம்தள்ளி 21 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார். நடால் 29 மேஜர் சுற்றுப்போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு வந்து அவற்றில் 21 போட்டிகளில் வெற்றியை ஈட்டியுள்ளார். அதே வேளை ஃபெடெரெர் மற்றும் ஜோகோவிச் இருவரும் 31 மேஜர் சுற்றுப்போட்டிகளில் ஆடி தலா 20 போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ளார்கள்.

ஞாயிறன்று றாட் லேவர் அரங்கில் நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில், ரஷ்ய ஆட்டக்காரர்ரான டானீல் மெட்வெடெவுடன் ஆடிய நடால் இரண்டு செட்டுகள் பின்தங்கியிருந்தும் 5 ஆவது செட் ஆட்டத்தில் அவரைத் தோற்கடித்து வெற்றிவாகையைச் சூடிக்கொண்டார். பெறுபேறுகள்: 2-6, 6-7, 6-4, 6-4, 7-5.

ஜோகோவிச் விவகாரம் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்த அதிருப்தி காரணமாக நடாலுக்கு இந்த போட்டிகளின்போது அதீத ஆதரவு கிடைத்திருந்தது. ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக அவருக்கு ஊக்கத்தைக் கொடுத்தது தெரிந்தது. ந்டால் இதுவரை ஆடிய ஆட்டங்களில் அவரது திறமைகள் அனைத்தையும் காட்டி விளையாடிய ஒன்றாக இந் நிகழ்வு பார்க்கப்படுகிறது.

2021 இல் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓப்பிண் சுற்றுக்களில் விளையாடாத நடால் அத்தோடு தனது ஆட்டத்தி நிறுத்திவிடப் போகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலிய ஓப்பிணில் வெற்றிபெறுவதன் மூலம் சாதனை படைக்க வாய்ப்புண்டு என்பொஅதால் இந்தத்தடவை அவர் விளையாடியதாகவும், 35 வயதுடைய நடால் இத்துடன் ஆட்டங்களிலிருந்து ஒதுங்கிவிடலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காலில் காயப்பட்டதன் காரணமாக ஃபெடெரர் இந்த வருடம் அவுஸ்திரேலிய ஓப்பிணில் விளையாடவில்லை. ஜோக்கோவிச் விசா விவகாரம் காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது.

ஒரே கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை இரண்டு தடவைகள் வென்றவர்கள் வரிசையில் ராட் லேவெர், நோவாக் ஜோகோவிச் வரிசையில் ரஃபேல் நடாலும் இணைகிறார்.