அவுஸ்திரேலியா | குழந்தை கொவாலாவைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டுவந்த நாய்! -

அவுஸ்திரேலியா | குழந்தை கொவாலாவைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டுவந்த நாய்!

Spread the love
மனதை உருக்கும் சம்பவம்

ஜனவர் 2, 2020

Kerry and her husband wrapped the joey in a blanket before giving him to a koala carer. Picture: Kerry McKinnon/Caters News
ஆஷா காப்பாற்றிய குழந்தை கொவாலா

அவுஸ்திரேலியாவின் காட்டுத் தீ மிக மோசமான, நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 12 பேரையும், அரை பில்லியன் காட்டு விலங்குகளையும் கொன்று குவித்திருக்கிறது.

இந்த நிலையிலும் அங்கு ஒரு மனதை நெகிழ்த்தும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

காட்டுத் தீயினால் அனாதையாக்கப்பட்ட ஒரு கோவாலாக் கரடி ஒன்றைக் காப்பாற்றித் தன் முதுகில் சுமந்து வீடு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது ஒரு கோல்டென் றிட்றீவர் நாய்.

மேற்கு விக்டோரியாவின் ஸ்றத்டவுணீ நகரைச் சேர்ந்த கெறி மக்கின்னன் அவர்களுக்குச் சொந்தமான நாய் ஒரு நாள் தன் முதுகில் ஒரு குழந்தை கொவாலா வைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து போனார்.

முதல் நாள் இரவு அப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அக் குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அலைந்து திரிந்து அக் குழந்தையைக் கெரியின் நாயான ‘ஆஷா’ வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

கெரி மக்கின்னனுடன் ஆஷா

“ஒரு நாள் அதி காலை என் கணவர் அவசரமாக அழைத்து “இங்கே வந்து பார் என்ன நடக்குதென்று என்று” என்றார். அப்போது வெப்பநிலை 5 பாகை செல்சியஸ் இருக்கும். போய்ப் பார்த்தால், முதுகில் குழந்தை கொவாலாவைத் தாங்கியபடி ஆஷா நின்றுகொண்டிருந்தது. நான் விழுந்து விழுந்து சிரித்தேன். ஆஷாவுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. என்னை விடாமல் பார்த்துக்கொண்டிருந்தது. பின்னர் குழப்பமான பார்வையுடனும் ஒருவித குற்ற மனப்பான்மையுடனும் கூனிக் குறுகியது. முதுகில் சவாரி செய்த கொவாலாவை இறக்கிவிட எந்த வித முயற்சியையும் அது செய்யவில்லை. கொவாலாவைப் பிரிக்க நாங்கள் முயன்றோம் ஆனால் அது ‘ஆஷாவை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. இரண்டும் சந்தோசமாக இருந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது” என்கிறார் கெரி.

மிருக வைத்தியரின் பரிசோதனைக்குப் பிறகு. தற்பொழுது கொவால ஒரு பராமரிப்பகத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறௌ. சூழ்நிலை சாதகமாக வந்ததும் அதை மீண்டும் காட்டிற்குள் கொண்டுபோய் விடத் தீர்மானித்திருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  மிஷேல் ஒபாமா | உலகில் அதிகம் புகழப்படும் பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *