Spread the love

ஜூலை 28, 2020: கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின்போது 3 பில்லியன் வன விலங்குகள் மரணமாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்றில் இதுவே மிக மோசமான காட்டுத் தீ என, இது பற்றிய அறிக்கையைத் தயாரித்த இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature) அறிவித்திருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் சகல மாநிலங்களையும் பொசுக்கிய இத் தீ, 33 மனிதர்கள் உட்பட, பாலூட்டிகள், ஊர்வன, பறப்பன, தவளைகள் என ஒரு உயிரினங்களயும் விட்டுவைக்கவில்லை. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய நகரங்களில் மட்டும் 1.25 பில்லியன் விலங்குகளைக் கொன்றிருந்தது.

இங்கிலாந்தின் அளவிலான தரைப் பிரதேசத்தை (11.46 மில்லியன் ஹெக்டெயர்கள்) இத் தீ அழித்திருந்தது.

கொவோலாக்களும், வல்லபிகளும் முக்கியமாக மீண்டும் பெருப்பிக்கப்படவேண்டியவை. அதுபோல் பறவைகள், தவளைகள் எனப் பல இனங்கள் மீளுருவாக்கம் செய்யப்படவேண்டியுள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் US$ 35m தொகையை இதற்காக ஒதுக்கியிருக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  பெய்ரூட்டில் குண்டு வெடிப்பு - 60 பேருக்கு மேல் மரணம், 3000 த்துக்கும் மேல் காயம்!