அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை!

Spread the love
‘Think . Act . Responsibly’

ஜனவரி 02, 2020

பருவநிலை மாற்றத்தில் நம்பிக்கையில்லாத அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் .
  •  சிங்கப்பூர் நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவின் தண்ணீரைக் கனடிய நிறுவனமொன்றிற்கு $490 மில்லியன் டாலர்களுக்கு விற்கிறது
  •  வரட்சியின் காரணமாக அவுஸ்திரேலியாவில் மக்களுக்கு அதி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
  •  ‘ஓலம்’ நிறுவனம் அவுஸ்திரேலியாவின் 89,085 மெகாலீட்டர் தண்ணீரை எடுக்கும் நிரந்தர உரிமையைப் பெற்றிருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஓலம் என்ற நிறுவனம், கனடிய ஓய்வூதிய நிதியத்தில் இயங்கும் நிறுவனமொமன்றிற்கு, 89,000 மெகாலீட்டர் அவுஸ்திரேலியாவின் தண்ணீரை விற்பனை செய்கிறது.

அவுஸ்திரேலியா வரலாறு காணாத வரட்சியைக் கண்டு வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் இல் கடந்த பத்து வருடங்களாக, மிகக் கடுமையான தண்ணீர்ப்பாவனை நடைமுறையில் இருந்து வருகிறது.

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ நடப்பது சாதாரணமெனினும், இந்த வருடம் வரட்சி முன்னதாகவே ஆரம்பித்தும், கடுமையானதாகவும், காலத்தில் நீடித்ததாகவும், வெப்பநிலை மிக மோசமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.


ஆனாலும் ஓலம் இன்ரர்னாஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனத்தை இவை எதுவும் பாதிப்பதாயில்லை. உணவு, விவசாயப் பொருட்களை உற்பத்திசெய்து உலகெங்கும் விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். அவுஸ்திரேலியாவின் 89 பில்லியன் லீட்டர் தண்ணீருக்கான நிரந்தர உரிமத்தை இந் நிறுவனம் பெற்றிருக்கிறது. இத் தண்ணீரை அந் நிறுவனம் கனடாவைச் சேர்ந்த பொதுப்பணி ஓய்வூதிய முதலீட்டு (Public Sector Pension Investment) $490 மில்லியனுக்கு விற்பனை செய்கிறது. இந் நிறுவனத்தின்

இணையத்தள முகப் படத்தில் காணப்படும் பொன்மொழி!

Canadian Public Pension Fund Investments proudly calling for “Think, Act, Responsibly” while depriving Australia of its wilderness

இக் கனடிய நிறுவனம் அவுஸ்திரேலியாவிலுள்ள தன் வியாபாரப் பயிரான அல்மொண்ட் மரங்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கு அத் தண்ணீரைப் பாவிப்பதாக அறியப்படுகிறது.

அன் நிறுவனம் தண்ணீரை விவசாயத்துக்குத் தானே பாவிக்கிறது எனச் சிலர் காரணம் கூறுகிறார்கள். அல்மண்ட் கிடைக்காமல் மனிதர் கதறுவதில்லை. தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் கதறுகின்றன

Think.Act.Responsibly!

Print Friendly, PDF & Email
Related:  பொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Leave a Reply

>/center>