அற்புதசீலி அம்மாவுக்கு வாக்களியுங்கள்!
பெருமைக்குரிய தமிழர்கள்
உலகெங்கும் தமது குடும்பங்களிலும், சமூகங்களிலும் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சிறு தொழில் முகவர்களை இனம் கண்டு அவர்களைக் கெளரவித்து ஊக்குவிக்கும் வகையில் ‘பியர் ஸேர்வன்ட்ஸ்’ (PEER Servants) அமைப்பு வருடாந்த ‘லிடியா’ விருதை வழங்குகிறது.
இணையவழி வாக்களிப்பில் மூலம் இந்த வருட (2021) தேர்வின் இறுதிச் சுற்ருக்குத் தெரிவாகியிருக்கும் மூவரில் இலங்கையைச சேர்ந்த அற்புதசீலி அம்மாவும் இடம்பெறுகிறார்.
செம்படம்பர் 15, புதன் கிழமை, பொஸ்டன் (அமெரிக்கா) நேரம் நள்ளிரவு வரை வாக்குகளை அளிக்க முடியும். இவ் வாக்குகளில் 10% மும் மீதி 90%, 30 ஆவது லிடியா நினைவு வருடாந்த நிகழ்வில் கலந்துகொள்வோர் அளிக்கும் வாக்குகளிலுமிருந்தும் பெறப்படும்.
அற்புதசீலி அம்மா

அற்புதசீலி அம்மாவும் அவரது கணவரும் ஐந்து பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒரு மீனவக் குடும்பம். இவர்களில் ஒரு மகன் சுகவீனம் காரணமாகப் பார்வையை இழந்துவிடடார். பின்னர் இறுதிப்போர் வந்தது. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் மீன் பிடிக்கச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை.
அற்புதசீலி அம்மாவும் அவரது பிள்ளைகளும் அகதிகளாக ஓடினார்கள். இடத்துக்கிடம் அலைந்து நிவாரணப் பிச்சையில், கிடைத்தால் உண்டும் கிடைக்காவிடில் பட்டினியுடனும் பொழுதைக் கழித்தார்கள்.
போர் முடிந்ததும் அவர்கள் தமது கிராமத்துக்குத் திரும்பினார்கள். அவர்களது வீடு என்று சொல்வதற்கென்று ஒன்றும் இருக்கவில்லை.
குடும்பத்துக்குச் சாப்பாடு போடுவதற்காக அவர் சமையல் கூலி வேலைக்குப் போனார். கட்டுப்படியாகவில்லை. ஒருநாள் அவர் ‘வைகுறோ -ஹீட்’ (YGro-HEED) என்னும், இலங்கையில் இயங்கும் ‘பியர் சேர்வன்ட்ஸ்’ அமைப்பின் பங்காளி அமைப்பு பற்றி கேள்விப்படடார். ‘ஹீட்’ இடமிருந்து $150 டாலர்களை நுண்கடனாகப் பெற்று சில வலைகளை வாங்கி அவரது கணவரின் நண்பர்களுக்கு வாடகைக்கு கொடுத்தார். அவற்றில் பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதியே வலைக்குக் கிடைக்கும் வாடகை. இதே வேளை வலைகளைத் திருத்தும் தொழிலையும் அவர் கற்றுக் கொண்டார். வியாபாரம் வளர்ந்தது. விரைவிலேயே தான் பெற்ற கடனைத் திருப்பிஸ் செலுத்திவிடடார். தொடர்ந்தும் சற்றுப் பெரிய கடன்களைப் பெற்று வியாபாரத்தை மேலும் நான்கு மடங்குகளுக்குப் பெருக்கிக் கொண்டார்.
அற்புதசீலி அம்மாவின் கடின உழைப்பு பலன் தந்தது. அவரது பிள்ளைகள் அனைவரும் கல்வி கற்றுத் தேறியுள்ளார்கள். பார்வையிழந்த அவரது மகன் இப்போது, தன்னைத் தானே கவனித்துக்கொள்ளக்கூடிய, ஒரு கல்லுரிப் படடதாரி.
அற்புதசீலி அம்மா இப்போது அவரது சமூகத்தில் ஒரு உதாரண பெண். ஆணாதிக்கம் மேலோங்கியிருக்கும் மீனவ சமூகத்தில் இது ஒரு அசாத்திய நிகழ்வு. தற்போது அவர் வழிபட்டு வந்த தேவாலயத்தை மீளக் கட்டியெழுப்ப உதவிகளைச் செய்து வருகிறார். தன் கணவரைப் போல காணாமலாக்கப்பட்டவர்களுக்கான தொடர் போராட் டத்திலும் ஈடுபட்டு வருகிறார்.