அறிவித்தல் | தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான கவனயீர்ப்புப் போராட்டம் ரத்து செய்யப்படுகின்றது
ஆகஸ்ட் 27, 2020:
அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவு கூரும் நாளான ஆகஸ்ட் 30 அன்று; வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் நடைபவனியும் கவனஈர்ப்புப் போராட்டமும் மார்க்கம் – ஸ்டீல் சந்திப்பில் இருக்கும் பூங்கா (John Daniels Park – 7060 Markham Rd, இருந்து நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டது. அந்த கவனயீர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை மக்களுக்கு அறியத் தருகின்றோம்.
கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து எம்மால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே . எனினும் அன்றையதினம் ஒட்டோவா நோக்கிய நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாலும், தாயகத் தேர்தல் களத்தில் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பின்னடைவுகளையும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு புலம் பெயர் தேசங்களிலும் எதிரியின் திட்டமிட்ட செயற்பாட்டுக்கு இடம்கொடுக்காத வகையிலும் இப் போராட்டத்தை இரத்து செய்து கொள்கிறோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
நன்றி
தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும்
தொடர்புக்கு: 416.830.7730