Related posts: ஐக்கிய நாடுகள் மரித உரிமை ஆணையம் தங்கள் விசாரணையில் தமிழின அழிப்பிற்கான முழுமையான விசாரணையை உள்ளடக்க கோரி (வாகன)பேரணி Global Tamil Forum mourns
Read MoreRelated posts: ஐக்கிய நாடுகள் மரித உரிமை ஆணையம் தங்கள் விசாரணையில் தமிழின அழிப்பிற்கான முழுமையான விசாரணையை உள்ளடக்க கோரி (வாகன)பேரணி Global Tamil Forum mourns
Read Moreஅறிவித்தல் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் உபசரணையில் யாழ். மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் ஜூலை 15, 2023 சனிக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு யாழ். பல்கலைக்கழக
அறிவித்தல் UPDATE: திவாகர் பரம்சோதி வீடு திரும்பி நலத்தோடு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது நண்பர்கள் மத்தியில் திவா என அழைக்கப்படும் திவாகர் பரம்சோதி கடந்த இரண்டு நாட்களாகத்
Read MoreA virtual town hall meeting is being organized by the United States Ambassador to Sri Lanka Julie Chung, with the
Read MoreMassive peoples protest- a reason to hope for a better future Global Tamil Forum, the most influential Diaspora organization, amongst
Read Moreஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை தொடர்பாக சமீப காலங்களில் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எடுத்துவரும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், இவ் விடயத்தில் தமிழ்த் தேசியக்
Read Moreஅறிவித்தல் பெப்புரவரி 16, 2022 ரொறொன்ரோ: தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரம் – சட்டம் 104க்கு எதிராகத் தமிழ் இனவழிப்பை மறுப்பவர்களால் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று முடிவடையும் ஏழு நாட்களையும் தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரமாகச் “சட்டம் 104” பிரகடனம் செய்துள்ளது. இந்த வாரத்தில் ஒன்ராறியோ மக்கள் தமிழ் இனவழிப்பு பற்றியும் உலக வரலாற்றில் நடந்தேறியுள்ள பிற இனவழிப்புக்கள் பற்றியும் கற்றுக் கொள்வதோடு அவை பற்றிய விழிப்புணர்வைப் பேணவும் ஊக்குவிக்கப் படுகின்றனர்.செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று முடிவடையும் ஏழு நாட்களையும் தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரமாகச் “சட்டம் 104” பிரகடனம் செய்துள்ளது. இந்த வாரத்தில் ஒன்ராறியோ மக்கள் தமிழ் இனவழிப்பு பற்றியும் உலக வரலாற்றில் நடந்தேறியுள்ள பிற இனவழிப்புக்கள் பற்றியும் கற்றுக் கொள்வதோடு அவை பற்றிய விழிப்புணர்வைப் பேணவும் ஊக்குவிக்கப் படுகின்றனர். இந்தச் சட்டவரைபை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் பிரச்சாரமும் 2018இல் ஆரம்பிக்கப்பட்டது. இளையோர் அமைப்புக்கள். சமூக அமைப்புக்கள், சமூக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இம் முன்னெடுப்புக்களை நெறிப்படுத்தினர். இந்தச் சட்டவரைபு ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் தணிகாசலம் அவர்களால் ஒன்ராறியோச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரினதும் முழு ஆதரவோடு இச்சட்டவரைபானது மூன்றாம் வாசிப்பைத் தொடர்ந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு மே 12,2021 அன்று அரச ஒப்புதலையும் பெற்றுச் சட்டமாக்கப்பட்டது. இனவழிப்பை மறுத்தலே இனவழிப்பின் இறுதிக் கட்டமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சியானது, இனவழிப்பை மறுக்கின்ற முயற்சிக்கு வலுச் சேர்ப்பதாக அமைவதால் ஆழ்ந்த மனவுழைச்சலை ஏற்படுத்துகின்றது. ஓர் இனக் குழுமத்தை உடல் மற்றும் சொத்துக்களை அழிப்பதோடு மட்டும் இனவழிப்பு முடிந்து விடுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை அழிப்பதும் அவர்களின் மனம் ஆறுதல் அடைவதை தடுப்பதற்கான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கிவிடுவதும் தொடர்கின்றது. வரலாற்றில் பிற இனவழிப்பு எப்படி மறுக்கப்பட்டதோ, இன்று எப்படி தமிழ் இனவழிப்பு மறுக்கப்படுகின்றதோ, காலங்காலமாக இனவழிப்பானது மிகவும் மோசமாக தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு இடையூறு ஏற்படினும், இனவழிப்பு மறுத்தலையும் அதனைத் திரிபுபடுத்துதலையும் எதிர்த்து தொடர்ந்து போராடுவது எமது கடமையாகும். இனவழிப்பை புரிந்த குற்றவாளிகள் தமது குற்றங்களைத் தொடர்ந்தும் மறுத்தே வந்துள்ளனர் என வரலாறு எமக்கு தொடர்ந்தும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. “தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் -104”ஐ குறிவைத்து, அதற்கெதிராகத் திட்டமிட்டு முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியானது, தமிழ் இனவழிப்பால் பாதிக்கப்பட்டவர்களை மௌனிக்கச் செய்ய இனப்படுகொலை மறுப்பாளர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதைக் காட்டுகின்றது. தமிழ் இனவழிப்பால் தலைமுறைகள் கடந்தும் ஏற்பட்டுகின்ற பாதிப்பை தமிழ் மக்கள் உணர்ந்தே உள்ளனர். இந்த சட்டத்தினூடாக அவர்களின் மன வலியை அங்கீகரித்துள்ளமையானது எம்மக்களும், எமது தொடரும் சந்ததியினரும், தமது மன வலியிலிருந்து குணமடைவதற்கான ஒரு ஆரம்ப வாய்ப்பாக அமையும். வழங்கப்பட்ட அந்த வாய்ப்பைப் பறித்தெடுப்பதானது அவர்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டிருக்கும் மன ஆற்றுப்படுத்தல் முயற்சியைப் பாதிக்கும். ஒன்ராறியோ வாழ் தமிழ்க் கனேடியர்கள் தலைமுறைகள் கடந்தும் எற்படுகின்ற தமிழ் இனவழிப்பின் தாக்கத்தால் அனுபவித்துவந்த மன வலியை, மே 12, 2021 அன்று நிறைவேற்றப்பட்ட சட்டமானது அங்கீகரித்தமையே, எமது ஒட்டுமொத்த சமூகத்தின் பேராதரவைப் பெற்றதற்கான காரணமாகும். மேலும், அச் சட்டம் நீதியின் அடிப்படையில் வகுக்கப்பட்டு எதிர் காலத்தில் இது போன்ற குற்றங்களைத் தடுப்பது பற்றிக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாகவும் அமைந்திருக்கின்றது. ஒரு இனக் குழுமத்தின் மனவலியை ஒப்புக்கொள்ளல் என்பது மன வலியை குணப்படுத்துததலின் ஒரு முக்கிய பகுதியாகும். இனவழிப்பு பற்றிய கல்வியில் கவனம் செலுத்துவதற்கென ஒரு வாரத்தை ஒதுக்கி அதனைப் பகிரங்கமாக அங்கீகரித்ததானது, தமிழ் இனவழிப்பாலும் பிற இனவழிப்புக்களாலும் ஏற்பட்ட மன வலியிலிருந்து பலர் குணமடைவதற்கு வழிவகுத்துள்ளது. நாம் ஒன்றுபடும் போது, எமது பலத்தால், இனவழிப்பை நடத்தியவர்களை எதிர்க்கும் சக்தியும் தைரியமும் எமக்குக் கிடைக்கின்றது. தமிழ் இனவழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டத்தைப் பாதுகாக்கும் வகையில் அதன் பின்னால் அணி திரள்வதற்கு உங்கள் ஆதரவு என்றும் போல் இன்றும் எமக்கு வேண்டும். கனேடியத் தமிழர் தேசிய அவை (NCCT), கனேடியத் தமிழ் இளையோர் கூட்டணி (CTYA), மற்றும் கனேடியத் தமிழ்க் கல்லூரி (CTA) ஆகியன இச்சவாலை எதிர்கொள்ளச் சட்டவல்லுநர் குழு ஒன்றுடன் இணைந்து முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. இம்முயற்சியின் முன்னேற்றம் பற்றி காலத்திற்குக் காலம் உங்களுக்கு அறியத் தருவோம். இனவழிப்பு மறுத்தலையும் திரிபுபடுத்தலையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோமாக! இம்முயற்சியில் இணைய விரும்புபவர்கள் info@tamilgenocideeducation.ca என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும். நன்றி தமிழ் இனவழிப்பு பாடத்திற்கான செயற்குழு மின்னஞ்சல்: info@tamilgenocideeducation.ca
Read MoreZoom நிகழ்வு விபரம் காலம் 22 January 22 ( Saturday ) 2.30 PM London,3.30 PM Europe ,8.00 PM Sri கவிதைப் பாடல்-
Read More