‘அரண்மனை மருத்துவர்’ எலியந்த வைட் கோவிட் தொற்றினால் மரணம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ‘அரணமனை வைத்தியராகக்’ கடமையாற்றியவரும், இலங்கையில் கோவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க விசேட மருந்தொன்றைக் கண்டுபிடித்தவரென உலகப் புகழ் பெற்றவருமான எலியந்த வைட் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளார்.
கோவிட் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அநுமதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பலனளிக்காமையால் அவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
ராஜபக்ச குடும்பத்தின் குடும்ப நண்பரான அவர் அக் குடும்பத்தின் ஆன்மீக மற்றும் பாரம்பரிய வைத்திய விடயங்களில் ஆலோசனைகளை வழங்கி வந்தார். அது மட்டுமல்லாது ராஜபக்சவின் சிபார்சினால் இந்தியாவின் பல பிரபல சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இலங்கைக்கு வந்து அவரிடம் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.