அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற சுதந்திரக் கட்சி உதவும் - சிறிசேன -

அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற சுதந்திரக் கட்சி உதவும் – சிறிசேன

Spread the love

ஜநவரி 11, 2020

மைத்திரிபால சிறிசேன

எதிர்வரும் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுக்கு உதவுமென அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“இந்த நாடு ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளவேண்டுமென்பதற்காக நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் திரு. கோதாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்திருந்தோம் எனவும் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் அதைத் தொடர்வோம்” எனவும், களுத்துறை வடக்கு சுகத வித்தியாயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போது அவர் தெரிவித்தார்.

அதே வேளை, எதிர்வரும் தேர்தலில் ஒத்துழைப்பது பற்றி இரண்டு கட்சிகளும் அடுத்துவரும் சில நாட்களில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவிருக்கின்றன. இதன் போது, இரண்டு கட்சிகளும் ஒரு தேர்தல் சின்னம் மற்றும் ஒரே தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றுடன் தேர்தலில் களமிறங்குவது பற்றிக் கலந்தாலோசிக்கப்படுமெனத் தெரிகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமைக்கு வழிசெய்ய வேண்டும் - சி.வீ. விக்னேஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *