News & AnalysisSri Lanka

அரசாங்கம் கூறுவதைப் போல மாகாணசபைத் தேர்தல்கள் இந்த வருடம் நடக்கமாட்டாது – வீரவன்ச

“2021 முடிவதற்குள் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவோம் என அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அதற்குச் சாத்தியமில்லை” என நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது அமைச்சர் விமல் வீரவன்சா தெரிவித்தார்.

“மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் புதிய தேர்தல் முறைமை, பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான வரைவை முதல் உருவாக்க வேண்டும். அதற்கு மக்கள் எதிர்ப்புகள் இருக்கின்றனவா என்பதஹி அறிவதற்குக் கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். பின்னர் இவ் வரைவு சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டு அங்கிருந்து அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு செல்ல வேண்டும்.. இந்நடைமுறைகள் இவ்வருட எல்லைக்குள் நடந்து முடியுமென நான் எதிர்பார்க்கவில்லை. எனவே மாகாணசபைத் தேர்தல்களை இவ்வருட முடிவிற்குள் நடத்துவது சாத்தியமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.