• Post category:SRILANKA
  • Post published:October 24, 2020
Spread the love

விமல் வீரவன்சவுக்கும் அழைப்பு

தற்போதய அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதால், நாட்டின் பாதுகாப்பு, எதிர்கால நலன்கள் குறித்து உடனடியாக ஒரு தேசிய அரசாங்கமொன்றை நிறுவ, பல முக்கிய புத்த பிக்குகள் முயற்சித்து வருகின்றனர். இவ்வரசாங்கத்தில் இணையுமாறு, விமல் வீரவன்சவையும் அவர்கள் கேட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கத்தை ஆடிசியில் அமர்த்த உழைத்த பல பிக்குகளும் இக்குழுவில் அடங்கிகிறார்கள்.

இவ்வரசாங்கத்தை அமைப்பதன் நோக்கம், 20 வது திருத்த விவகாரத்தில் அரசாங்கம் புத்த பிக்குகளின் ஆலோசனையைக் கேட்காது நடந்துகொண்டதற்காகவும், அமெரிக்காவுடன் செய்துகொள்ளவிருக்கும் மில்லேனியம் சலெஞ் கோர்பொறேசன் (MCC) ஒப்பந்தத்திற்கு எதிராகவுமெனக் கூறப்படுகிறது.

20 வது திருத்தத்திற்கு எதிராக புத்த பிக்குகளின் மகாசங்கம் மற்றும் பல தேசிய ரீதியிலான மாக்களமைப்புக்களும் எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தன. தற்போது இத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், புத்த பிக்குகள், இந்த அரசாங்கத்தில் தமக்கு இனிமேலும் நம்பிக்கை இல்லை எனக்கூறி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மக்களை இணைத்துப் போராடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Print Friendly, PDF & Email