அம்பாறையில் பிள்ளையார் சிலை உடைப்பு
அம்பாறை பிரதான வீதியில், கஞ்சிக்குடிச்சாறு சந்தியில் நிறுவப்பட்டிருந்த பிள்ளையார் சிலையொன்று இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் இப்படியான பல சம்பவங்கள் இவ்வருடத்தில் நடைபெற்றுள்ளன.
முல்லைத்தீவிலுள்ள மூங்கிலாறு என்னுமிடத்திலுள்ள சிவன் கோவிலிலிருந்த பிள்ளையார் சிலையொன்று இவ்வருட ஆரம்பத்தில் திருடப்பட்டிருந்தது. அப்போது கோவிட் தொற்று மோசமாக இருந்ததல் பயணத்தடை நடைமுறையில் இருந்தது. ஆனாலும் மக்களின் வரவு இல்லாமல் கோவில் பூசாரி தினமும் பூசைகளைச் செய்துவந்தாரென்றும் அப்படிச் செய்யக்கூடாது என பொலிசார் எச்சரித்ததைத் தொடர்ந்து இச்சிலை திருடப்பட்டிருந்தது. இதன் பின்னால் பொலிசாரே இருந்துள்ளனரென உள்ளூர் மக்களும் கோவில் நிர்வாகமும் கூறிவருகிறது.
அம்பாறை பிள்ளையார் சிலை உடைப்பு தொடர்பாக உள்ளூர் மக்கள் பொலிசில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறியப்படுகிறது.