Spread the love

செப்டம்பர் 10, 2020: அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மீதான கட்டுப்பட்டை முற்றாக இழந்து போனதற்காக, பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் துறைமுக, கப்பற் போக்குவரத்து அமைச்சர் றோஹித அபயகுணவர்த்தனா.

“அம்பாந்தோட்டைத் துறைமுகம் இலங்கையின் மிகவும் பெறுமதியான சொத்து. ஏனைய நாடுகளில் உள்ள துறைமுகங்களைப் போல எமது பொருளாதாரத்துக்கு மிகவும் வலுச்சேர்க்கவல்ல துறைமுகம் அது. நாம் இனிமேல் இதர நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட வேண்டும். இருப்பினும், ஒரு முக்கிய துறைமுகத்தை இழந்தமைக்காக நான் வருத்தப்படுகிறேன்” என அமைச்சர் தெரிவித்தார்.

முந்திய அரசு, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு எழுதிக் கொடுத்ததை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்த வருட ஆரம்பத்தில், கடுமையாக விமர்சித்திருந்தார்.

டிசம்பர் 2017 இல், 99 வருட குத்தகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நிர்வாகத்தை அமபாந்தோட்டை சர்வதேச துறைமுக குழு (Hambantota International Port Group (HIPG)) மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் (Hambantota International Port Services (HIPS)) ஆகிய நிறுவனங்கள் பொறுப்பேற்றன.

Print Friendly, PDF & Email
Related:  பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியைக் கைது செய்க - தமிழ் அமைப்புகள்
அம்பாந்தோட்டை துறைமுகம் எமது கட்டுப்பாட்டில் இல்லை – அரசாங்கம் வருத்தம்

அம்பாந்தோட்டை துறைமுகம் எமது கட்டுப்பாட்டில் இல்லை – அரசாங்கம் வருத்தம்