அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கான உரிமை வழங்கப்படவேண்டும் – இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதி

வலுக்கும் அரசுக்கெதிரான போராட்டங்கள்

“பொது இடங்களில் கூடி அமைதியான ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல வழிகளிலும் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. இது ஏனைய உரிமைகளைப் பயன்படுத்தவும், சுதந்திரமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கவும் பொதுவான கொள்கை உருவாக்கத்துக்கும் பயன்படும்” என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர் தனது ருவீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கொரோணாச் சட்டங்களைக் காரணம் காட்டி அரசாங்கம் அவர்களைக் கைது செய்து பூசா போன்ற தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறது.

 

கொத்தலாவெல சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அதே வேளை பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்டவிருக்கும் கொத்தலாவல சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களும் கொரோணா தொற்றைக் காரணம் காட்டிக் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இப்படிப் பலவகையான ஆர்ப்பாட்டங்களிலும் கைது செய்யப்பட்டவகள் சிலரை நீதிமன்றம் பிணையில் விடுவித்த பின்னரும் கூட கொறோணா தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள்ளார்கள். தொற்றுப் பரிசோதனைக்குள்ளாக்கிய பின்னரும் அவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என தொழிற்சங்கத் தலைவர்களும், எதிர்க் கட்சி உறுப்பிநர்களும், சிவில் சமூக அமைப்புகளும் தமது எதிர்க்குரல்களை எழுப்பி வருகிந்றனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஆசிரியர் சங்கம், தாதிகள் சங்கம் போன்ற மேலும் பல தொழிற்சங்கங்களும் விரைவில் போராட்டத்தில் கூதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இப் பின்னணியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி தநது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்ப்பாட்டக் காரர்களின் கைதுகள் சட்டத்துக்குப் புறம்பானவை என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கமும் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. “தொற்றுள்ளவர்களையும், தொற்றுள்ளவர்களோடு தொடர்புகொண்டவர்கள் எனச் சந்தேகப்படுபவர்களயும் மட்டுமே தனிமைப்படுத்துவது வழக்கம். அப்படியிருக்க ஆர்ப்பாட்டம் செய்தவர்களைத் தனிமைப்படுத்தலுக்கெனத் தடுத்து வைத்திருப்பது என்பது எவ்வகையில் நியாயமாகும்” எனக் கேட்டு வழக்கறிஞர் சங்கம் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கும், சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்த்தனவுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள், புத்த பிக்குகள் எனப் பலர் மீதும் பொலிசார் வன்முறையைப் பாவித்து இக் கைதுகளைச் செய்திருந்தமை காணொளி வடிவத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.