அமைச்சுகள், அலுவலகங்களில் தனது படத்தை மாட்டக்கூடாது – ஜனாதிபதி ராஜபக்ச

Spread the love
பல மில்லியன் ரூபாக்கள் சேமிப்பு!

நவம்பர் 19, 2019

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் எடுத்த கையோடு பல மில்லியன் ரூபாய்களைச் சேமிக்கும் நடவடிக்கை ஒன்றிற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

எந்தவொரு அமைச்சுகளிலோ அல்லது அரச அலுவலகங்களிலோ தனது படத்தை வைக்க வேண்டாமெனவும் அதே வேளை அமைச்சர்கள், உதவி அமைச்சர்கள் ஆகியோரது படங்களையும் எந்த அலுவலகத்திலும் வைக்கவேண்டாமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஜானாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்றதும் முன்னையவர்களது படங்களை மாற்றிப் புதியவர்களது படங்களை மாட்டுவது வழக்கம். ஜனாதிபதியின் இன் நடவ்டிக்கை பல மில்லியன் ரூபாய்களைச் சேமிப்பது மட்டுமல்லாது, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த மக்களிடமிருந்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

புதிய படங்களை மாற்றீடு செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவாகுவது வழக்கம்.

அதே வேளை பொதுப் பணத்தைச் செலவிடும் திட்டங்களில் அரசியல்வாதிகளின் பெயர்கள் இனிமேல் பொறிக்கப்படமாட்டாது என்பதோடு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளுக்குப் பொதுப் பணத்தைச் செலவிடுவதையும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  வடக்கு மக்களுக்குப் பயணத்தடை - ஜனாதிபதி அலுவலகம் பணிப்பு

Leave a Reply

>/center>