Columnsசிவதாசன்

அமெரிக்க தேர்தல்: கமலாக்காவின் திரிசங்கு நிலை

நவம்பர் 05 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாள். கமலாக்காவுக்கு சிரிப்பு அகன்ற அளவுக்கு வாக்குகள் விரியவில்லை. ஊடகங்கள் neck & neck ஆகக் காட்டி சுய இன்பம் பெறுவது அமெரிக்காவில் எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் மதிலமர்ந்த வாக்காளர்கள் எப்பக்கம் குதிக்கப்போகிறார்கள் என்பதே வெள்ளை மாளிகையில் கறுப்பினத்தவரா அல்லது வெள்ளை இனத்தவரா குடியேறப்போகிறார்கள் எனத் தீர்மானிக்கப் போகிறது. இதுவரை தகாத வார்த்தைகளைப் பேசிப் பழகிப்போன ட்றம்ப் இப்போது அதை ரக்கர் கார்ள்சன் போன்றோருக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டார். ஆனால் அக்காவுக்கு அந்தக் கலை இன்னும் கைவரவேயில்லை. இத்தனைக்கும் அக்காவின் கஜானா இஸ்ரேலிய நண்பர்கள் பணத்தால் நிரம்பி வழிகிறது. இப்பின்னணியில் இத் தேர்தலின் முக்கியமென்ன அமெரிக்கா என்ற இப்பாரிய இயந்திரத்தை இயக்குபவர்கள் யார் அவர்களின் நோக்கம் என்ன என்பதை சற்று விரிவாகப் பார்க்க விளைகிறது இக்கட்டுரை .

இஸ்ரேல் – பாலஸ்தீனிய போரின் பாகம் x ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. யூத நாடோடிகளுக்கு பால்ஃபோர் பிரகடனம் வாங்கித்தந்த நிரந்தர நிலமான பாலஸ்தீனத்தை அகன்ற இஸ்ரேலாக்குவதோடு உலகை ஆள்வதற்கான உரிமையைத் தம்மிடமே கட்வுள் தந்திருக்கிறார் என நம்பும் றொத்ஷைல்ட் குலம் தன் இறுதி நோக்கத்தை அடைய எடுத்த இந்தப் போரின் முடிவு எப்படி இருக்கப் போகிறது?


கடந்த இரண்டு வாரங்களுக்குள் கசியவிடப்பட்ட இராணுவ இரகசியம் ஒன்றின்படி அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னர், பெரும்பாலும் நவம்பர் முதல் வாரத்தில், ஈரான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலொன்றை ஆரம்பிக்கப்போகிறது எனப் பலதரப்பச் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவரும் அமெரிக்க / மத்திய கிழக்கு பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணர்களில் ஒருவருமான கேணல் மக்கிறெகர் என்பவரின் ஊகத்தின்படி இஸ்ரேல்-ஈரான் போர் நிச்சயம் எனப்படுகிறது. ஏனிந்த அவசரம்?

ஒரு பார்வை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை இத் தேர்தல் தீர்மானிக்க வேண்டும் என்பது. இங்கு பிரதான போட்டியாளர் ‘இருவருமே இஸ்ரேல் என்னுடையது’ எனக் கட்டிப்பிடிக்க முயல்கின்றனர். இஸ்ரேலோ இருவரையும் இறுக்கிக் கட்டிக்கொண்டாலும் கமலா அக்காவின் இடை கொஞ்சம் இறுகப் பற்றப்பட்டிருக்கிறதை அவதானிக்க முடிகிறது. ஆதாரத்திற்கு கீழேயுள்ள நிதி வழங்கும் பட்டி நிரலைக் கவனமாகப் பாருங்கள். பெரும்பாலான அமெரிக்க வணிக நிறுவனங்களின் பட்டியலில் யூத இன வியாபாரிகளின்ஆதிக்கத்திலிருக்கும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. கமலாக்கா ஏன் இஸ்ரேலின் கனவுக் கன்னியாக இருக்க வேண்டும்?

ட்றம்பின் மருமகன் ஒரு பலமான யூதர். ட்றம்பின் முந்திய ஆட்சியின்போது சவூதி அரேபியாவுடன் டீல் போட்டு ‘ஆபிரகாம் ஒப்பந்தம்’ எழுதப்படக் காரணமானவர். இதன்படி சவூதி, கட்டார், அரபுக் குடியரசு உட்படப் பல நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்து உறவுகளைச் சீரமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபர் ஹமாஸ் தாக்குதல்கள் அதைக் குழப்பிவிட்டது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம். அது மட்டுமல்லாது அரபுக்களின் புனிதக் கோவிலான அல் அக்சா மசூதி அமைந்திருக்கும் கிழக்கு ஜெருசலேமிற்கு தலைநகரை நகர்த்தியமைக்கு ட்றம்ப் துணை போயிருந்தார். “நான் எப்போதுமே இஸ்ரேல் பக்கம்” எனத் தவறாது மார்தட்டி வருபவர் ட்றம்ப். அப்படியிருக்க கமலா அக்கா மீது ஏன் இஸ்ரேலுக்குத் தீராத காதல்?

அமெரிக்க காங்கிரஸில் 80 % மானோர் இஸ்ரேலிய லொபிக் குழுவான ‘ஏய்பாக்’ கின் பணத்தை நம்பியே தேர்தலில் குதிக்கிறார்கள். கீழே பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் ஏய்பாக்கின் கட்டளையின் பேரிலேயே பணத்தை அள்ளி வாருகின்றன. கமலாக்கா ஆட்சிக்கு வந்தால் அரசாங்கத்தின் பலவிதமான கொந்துராத்துக்களும் இந்நிறுவனங்களுக்கே போகும்; இதனால் கொடுத்த பணம் ‘வட்டியோடு’ திரும்பக் கிடைத்துவிடும். இந்நடைமுறை கூடுதலாக வலதுசாரிகளான ட்றம்ப் போன்றவர்களுக்கே நன்மை பயக்குமென எதிர்பார்த்தாலும் காங்கிரஸ் என்று வரும்போது தீர்மானங்கள் 80% உறுப்பினர்களினால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவர்களுக்கு நிதி வழங்குபவர்களும் ஒரே குழுமம் தான். எனவே அமெரிக்க அரசின் எந்தத் தீர்மானத்தையும் இந்த 80% மே தீர்மானிக்கும்

ஒபாமா முதல் தடவையாக (2006) தேர்தலில் குதித்தபோது அவருக்கு எதிராக குடியரசுக் கட்சியில் ஜோன் மக்கெயின் என்பவர் போட்டியிட்டார். அப்போது பெரும் வணிக நிறுவனங்கள் ஒபாமாவுக்கு 10 மில்லியன் டொலர்களும் மக்கெயினுக்கு 6 மில்லியன் டொலர்களும் தேர்தலுக்கான நிதியாக வழங்கியிருந்தார்கள். இத்தனைக்கும் மக்கெயின் ஒரு தீவிர வலதுசாரி. வலதுசாரிகளே வியாபாரிகளுக்கு நலன் புரிவார்கள் என்ற நம்பிக்கை பொதுவாக அப்பாவி மக்களிடம் இருக்கிறது. ஆனால் இடதுசாரிகளின் நடிப்புத் தனமான அரசியல், பலவீனங்களைப் பணமாக்கும் வியாபாரிகளுக்கும் இஸ்ரேல் போன்ற சுய நன்மையையே மட்டும் முன்வைக்கும் நாடுகளுக்கும அதீத பலன்களை வழங்கும். அதே வேளை அமெரிக்க- முதல் வாதத்தை முன்வைக்கும் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகளினால் இந்த ‘ஸ்பெசல் இன்ரெறெஸ்ட்’ குழுமங்கள் பலன் பெறுவதில்லை. இதில் பார்த்தால் அமெரிக்காவின் பெரும்பாலான வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் இராணுவத் தளபாட உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சி வேட்பாளரையே ஆதரிப்பது வழக்கம். இந்நிறுவனங்களும் தாம் வழங்கிய நிதியை ஆயுத விற்பனைகள் மூலம் மீளப்பெற்றுவிடும். ஆனால் அவை அமெரிக்க முதல் வாத அடிப்டைத் தேசியவாதிகளுக்கு வேலைகளைக் கொடுப்பதால் அவை எப்போதுமே குடியரசுக் கட்சியை ஆதரிப்பது வழக்கம். ட்றம்பின் ஆதரவுத் தளம் இத் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டதே.

சரி மீண்டும் மத்திய கிழக்கிற்கு. தேர்தலுக்கு முன் ஏன் இஸ்ரேல் போரை ஆரம்பிக்க முயல்கின்றது? இதில் கமலாக்காவை ஜனாதிபதியாக்குவதால் என்ன நன்மை? இங்குதான் தனி மனித ஆளுமை கவனம் பெறுகிறது. ட்றம்ப் ஒரு பலமான decision maker. வாய்க்கு வந்தபடி பேசுவதும், பொய் சொல்வதும், சொல்வதைத் திரிப்பதும், ”ஆலோசகர்களின்’ ‘நிபுணர்களின்’ ஆலோசனைகளுக்கு எதிராக எழுந்தமானமாக முடிவுகள் எடுப்பதும் அவரது பண்புகள். ஆனால் தான் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் உடநெ ‘எக்செகூட்டிவ் ஓர்டர்’ மூலம் காரியததைச் சாதித்து விடுவார். மாறாக ஒபாமா, பைடன் போன்றோர் சொன்னதைச் செய்யும் சுப்பர்கள். கமலாக்கா நிச்சயமாக அப்படியான ஒருவர் என்பதைப் பலதடவைகள், குறிப்பாகப் பாலஸ்தீன விடயத்தில், நிரூபித்து விட்டார். அவர் ஜனாதிபதியாக வந்தால் ஆட்சி அதிகாரம் ஜெருசலேமில் தான் இருக்கும். ட்றம்ப் அப்படியானவரல்ல. நெட்டன்யாஹு நினைத்தபடி அவரை ஆட்டிப்படைக்க முடியாது. அவரது ஆட்சிக் காலத்தில் உலகத்தில் போர்கள் நடைபெறவில்லை. “மற்றவர்களின் பிணக்கிற்காக அமெரிக்க உயிர்களைத் தியாகம் செய்ய நான் தயாரில்லை” எனக் கூறுபவர். எனவே நெட்டன்யாஹுவின் அல்லது றொத்ஷைல்டின் பரந்த இஸ்ரேல் திட்டத்திற்கு ட்றம்ப் குந்தகமாகவே அமைவார். அதனால் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு முன் போரை ஆரம்பித்துவிடவேண்டும் என்பதே நெட்டன்யாஹுவின் திட்டம்.

ஈரான் மீது தொடுக்கப்படும் போர் எப்படி இஸ்ரேலுக்கு ஆதரவாக முடியும் என நீங்கள் கேட்கலாம். முதலில்: இப்போது காசா, லெபனான் மீது நடைபெறும் போர்கள் இரண்டு முனைப்புகளைக் கொண்டவை. ஒன்று அழிக்கப்படும் இடங்கள் அகன்ற இஸ்ரேல் திட்டத்தில் அடங்குபவை. எனவே அவை தரைமட்டமாகப்பட்டு புதிய நகரங்கள் வடிவமைக்கப்படவேண்டும். இரண்டாவது ஈரானுக்கு எதிரான போரின்போது ஹமாஸ், கெஸ்புல்லா போராளிகளின் ஏவுகணைகள் இடைஞ்சல் தரக்கூடாது. இந்த இரண்டு திட்டங்களும் ஓரளவு நிறைவேறி விட்டது. அடுத்தது ஈரான் மீதான தாக்குதல். கடந்த மாதம் ஈரான் இஸ்ரேல் மீது தூவிய குண்டுகள் ஈரானின் பலத்தை மட்டுமல்ல துல்லியத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டியிருந்தது. அதற்குப் பதிலடியாக கடந்த சில நாட்களில் இஸ்ரேல் தாக்குதலொன்றை மேற்கொண்டது. ஆனால் உலகத்துக்குக் காட்டியதுபோல் இத் தாக்குதல் இஸ்ரேல் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்கிறார்கள் கேணல் மக்கிறெகர் போன்றோர். இப்படி இருக்கும்போது ஏன் மீண்டுமொரு தாக்குதல்? இங்குதான் மக்கிறெகர் முதல் பல இராணுவ ஆய்வாளர்களது அனுமானம் ஒளி பாய்ச்சுகிறது. நெட்டன்யாஹுவுக்குத் தேவை நடைபெறப் போகும் போரில் அமெரிக்கத் தலையீட்டைக் கொண்டுவருவது.

மத்திய கிழக்கில் மட்டும் சுமார் 1,000 அமெரிக்கப் படைகள் நிலை கொண்டுள்ளன எனப்படுகிறது. டியகோ காசியா போன்ற இதர தளங்களில் சுமார் 50,000 அமெரிக்கப் படைகள் நிலை கொண்டுள்ளன. கடந்த மாதம் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க பேட்றியட் எதிரேவுகணைகளை அமெரிக்க கப்பல்கள் ஏவியிருந்தாலும் அவை இஸ்ரேலின் பாதுகாப்புக்காக எனவே கூறப்பட்டது. இதே வேளை ஈரானிடம் இருப்பது போல் நீண்ட தூரம் செல்லக்கூடிய ‘பலிஸ்டிக்’ ஏவுகணைகள் இஸ்ரேலிடம் பெருந்தொகையில் இல்லை. அதனால் இஸ்ரேல் எஃப் 16 போன்ற அமெரிக்க போர் விமானங்களைக் கொண்டே ஈரான் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது. அதே வேளை ‘இண்டர்கொன்ரினெண்டல் பலிஸ்ரிக் மிஸைல்’ உட்பட மணித்தியாலத்திற்கு 400 ஏவுகணைகளை, சில வாரங்களுக்குத் தொடர்ந்து ஏவும் திறன் ஈரானிடமிருக்கிறது. எனவே ஈரானுடன் போர் ஆரம்பித்தால் இஸ்ரேலில் பேரழிவு ஏற்படுமெனவும் இதன்போது அமெரிக்கா தலையிட்டேயாகும் எனவும் நெட்டன்யாஹு நம்புவதாகவும் அப்படியானதொரு நிலையில் அமெரிக்கா ஈரானை அழித்துவிடுமெனவும் சியோனிஸ்ட் தலைவர்கள் நம்புவதாகவும் கேணல் மக்கிறெகர் போன்றோர் கூறுகின்றனர்.

இஸ்ரேல் பாரிய அழிவுகளைச் சந்திப்பதால் அதற்கு என்ன இலாபம் என நீங்கள் கேட்கலாம். இதற்கு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு விடயம் இஸ்ரேல் பின்பற்றும் ‘ஹனிபல் டிறெக்டிவ்’ என்ற நடைமுறை. இப்பதங்களை நான் தமிழில் மட்டுமே தருவதற்கான காரணம் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமென நினைக்கிறேன். இந்த ‘ஹனிபல் டிறெக்டிவ்’ நடைமுறையின்படி இஸ்ரேலின் நன்மைக்காக இஸ்ரேலிய குடிமக்களைக்கூடக் கொல்வதில் தப்பில்லை’ என்ற கீதோபதேசம் பெரும்பாலான யூத மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமொன்று. அக்டோபர் 7 தாக்குதல் கூட நெட்டன்யாஹுவின் இப்படியான ஹனிபல் டிறெக்டிவ் திட்டமொன்றெனக் கூறுவோருமுளர்.

ஈரானுடன் போர் ஆரம்பிக்கப்படின் எப்படியான முடிவுகளை உலகம் எதிர்கொள்ளுமென நாம் எதிர்பார்க்கவேண்டும்? ஒன்று: ரஷ்யா, சீனா, ஈரான் நட்புறவு. ஈரான் 90 மில்லியன் மக்கள் வாழும் நாடு. ஒப்பீட்டளவில் இஸ்ரேலில் 9.9 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். கடந்த இரண்டு தசாப்தங்களில் அது ஒரு அணுவாயுத நாடாக மாறியிருக்கிறது. ட்றோண் தொழில்நுட்பத்தில் முன்னணியிலிருக்கும் நாடு. ரஷ்யாவின் சமீபத்து உற்பத்தியான ‘சுப்பர்சோனிக்’ ஏவுகணைகள் ஈரானிடமுண்டு. துல்லியத்தில் மட்டுமல்ல இஸ்ரேலிய இரும்புக் கூடாரம் எனப்படும் அமெரிக்க எதிர்ப்பு ஏவுகணைகள் புறப்படுவதற்கு முன்னரே அவற்றைத் தாக்கியழித்துவிடுமளவுக்கு வேகமானவை. இவ்வேவுகணைகளில் அணுவாயுதத்தை ஏற்றி அனுப்பினால் நிலைமை என்ன? அதிர்ஷ்ட வசமாக இதுவரை ரஷ்யாவோ ஈரானோ இவ்வணுவாயுதக் குண்டுகளை (வார் ஹெட்ஸ்) பாவிக்கவில்லை. நடக்கவிருக்கும் மத்திய கிழக்குப் போரில் அமெரிக்கா தலையிட்டால் இவை பாவனைக்குத் தள்ளப்படும். அதுவே தான் இஸ்ரேல் அதிபர் நெட்டன்யாஹு விரும்புவது.

ட்றம்ப் ஆட்சிக்கு வந்தால் இது நடைபெறப் போவதில்லை. ட்றம்ப் அடிப்படையில் ஒரு அமெரிக்கத் தேசியவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவர் ஒரு ஹிட்லர் அபிமானி. புட்டின், கிம்-ஜொங்-உண் போன்ற சர்வாதிகாரிகளை ஆராதிப்பவர் அவர். அவரோடு துணை நிற்கும் இலான் மஸ்க், ரக்கர் கார்ள்ஸன் போன்றோரும் அடிப்படையில் ஹிட்லர் அபிமானிகளே. அதற்குக் காரணம் அமெரிக்கா யூதர்களின் அடிமையாகி விட்டது என்ற எண்ணம் தான். பாலஸ்தீன குழந்தைக் கொலைகள் உலகம் முழுவதும் யூத எதிர்ப்பாளர்களை வலுப்படுத்தி வருகிறது. ஹிட்லர் தனது கடமையை முடிக்கவில்லை என்ற கோஷங்களோடு அவரது ஆதரவாளர்கள் பங்கர்களிலிருந்து புறப்பட்டு விட்டார்கள். இந்நிலையில் ட்றம்பின் வருகை இஸ்ரேலின் ‘பரந்த இஸ்ரேல் கனவை’ சீரழித்து விடும். எனவே தான் கமலாக்காவின் வருகைக்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் பார்த்தால் ட்றம்ப் மீதான கொலை முயற்சிகளின் பின்னால் யார் யார் இருந்திருக்கலாம் என்ற ஐயமும் தெளிவாகலாம். கருத்துக் கணிப்புகளின்படி தற்போது ட்றம்ப் முன்னணியில் இருப்பதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தான் ஈரான் மீதான போருக்கான முஸ்தீபு என மக்கிறேகர் போன்றோர் ஐயமுறுகின்றனர். அதுமட்டுமல்லாது இஸ்ரேலில் வாழ்ந்த வெளிநாட்டு யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக பென் கூரியன் விமான நிலையத்தில் கூடாரமடித்திருப்பது பெரும் போருக்கான கட்டியமாகவும் பார்க்கப்படுகிறது.

இதே வேளை ஈரான் மீதான போர் சாத்தியம் என்ற தகவற் கசிவு எப்படி ஏற்பட்டது என்பதும் விவாதத்திற்குரியது தான். அமெரிக்க உயர் பாதுகாப்பு பீடங்களிலுள்ள ட்றம்ப் ஆதரவாளர்கள் மற்றும் யூத எதிர்ப்பாளர்கள் இவ்விடயத்தைக் கசிய விட்டிருக்கலாம் எனச் சிலரும், ஈரானிய கணனி நிபுணர்கள் அமெரிக்க இராணுவ இரகசியங்களைத் திருடி வெளியிட்டுள்ளனர் எனச் சிலரும் இஸ்ரேலின் உளவு நிறுவனங்களே வேண்டுமென்று குட்டையைக் குளப்புவதற்காக இதை வெளியிட்டிருக்கலாம் எனச் சிலரும் கருதுகிறார்கள். ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம் கமலாக்காவின் புரட்சிகர இடதுசாரிச் சிந்தனைகள், பாலஸ்தீன ஆதரவு எல்லாவற்றையும் ‘ஏய்பாக்’ மொத்தமாக வாங்கிவிட்டதன் காரணமாக அவருக்கிருந்த இடதுசாரிகள், முற்போக்குவாதிகள், முஸ்லிம்கள் போன்றோரின் ஆதரவை அவர் அடியோடு இழந்தமை ட்றம்ப்பின் தெரிவை உறுதிப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் ரக்கர் கார்ள்சன் சொன்னது போல கமலாக்காவின் விவேகத்தில் சற்று மந்தம் இருப்பதாகவும் கருதவேண்டியிருக்கிறது.

பாவம் கமலாக்கா. ஆழ்ந்த அனுதாபம்!

(Image Credit: Open Minded Thinker Show Screen Grab)