அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு?

Spread the love

அமெரிக்காவிற்கும் தலிபான்களிற்குமிடையில் கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெற்றுவந்த எட்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. சமாதான ஒப்பந்தமொன்று விரைவில் எட்டப்படுமெனவும் வருகின்ற வாரங்களில் அறிவிப்பு வெளிவரும் எனவும் தலிபான் அமைப்பு அறிவித்ததாகத் தெரிகிறது.

ஆகஸ்ட் 4 இல் பேச்சுவார்த்தைகள் முடிவிற்கு வந்திருந்தாலும் இரு தரப்பினரும் தத்தம் தலைமைகளோடு ஆளொசித்த பின்னரே முடிவுகள் அறிவிக்கபடும் எனக் கூறினர்.

கடந்த ஒரு வருடமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் நான்கு முக்கிய அம்சங்கள் மையப்பொருளாக இருந்தன. 1) வெளிநாட்டு ஆயுதக்குழுக்களையோ ஆயுததாரிகளையோ ஆப்கானிஸ்தானை ஏவுதளமாகப் பாவிக்க தலிபான் அனுமதிக்காது 2) அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றாக அகற்றப்படும் 3) ஆப்கானிஸ்தான் உள்ளக அமைப்புக்களிடையேயான பேச்சுவார்த்தை 4) நிரந்தர போர் நிறுத்தம்.

சுமார் 14,000 அமெரிக்கப் படைகளும், 17,000 நேட்டோ படைகளும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன.

அமெரிக்கா தன் படைகளை மீளப்பெறுவதற்கான கால அட்டவணையைத் தரவேண்டுமெனவும் அதன் துருப்புக்கள் ஆப்கானிய மண்ணை விட்டு சில மாதங்களுள் வெளியேறிவிடவேண்டுமென்பதும் தலிபான்களின் கோரிக்கையாகும்.

இருப்பினும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தலிபான்கள் ஆப்கானிய அரசாங்கப் படைகள் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றனர். இதனால் பல அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் உயிரிழந்துவருகின்றனர்.

ஆப்கான் அரசாங்கம் பலதடவைகள் கேட்டுக்கொண்ட போதும், அமெரிக்க அரசாங்கம் பலதடவைகள் வற்புறுத்தியபோதும், தலிபான்கள் அர்சாங்கத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். காபுல் அரசாங்கம் உண்மையில் அதிகாரங்களைக் கொண்டது அல்ல. அது ஒரு பொம்மை அரசாங்கம் எனத் தலிபான் கூறுகிறது.

பேச்சுவார்த்தை முறிவதாக இருந்தால் அது எழுதப்பட்ட ஒப்பந்தத்தைத் தலிபானின் வெவ்வேறு பிரிவுகளால் ஒழுங்காகப் பின்பற்ற முடியாமல் போவதால்தான்.

கடந்த வருடம் ஜனவர் 31 வரையில் ஆப்கானிஸ்தானின் 229 மாவட்டங்கள், நாட்டின் 56.3% நிலப்பரப்பு மட்டுமே ஆப்கானிஸ்தானின் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கிறது.

பேச்சுவார்த்தை கட்டார், ஜேர்மனி அரசுகளின் ஆதரவில் முன்னெடுக்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
>/center>