அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம்
Hand putting a ballot into ballot box with american flag behind

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம்

Spread the love

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 2 இல் நடைபெறவிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இத் தேர்தல் முடிவுகள் முழு உலகத்தையும் முன்னெப்போதுமில்லாத வகையில் பாதிக்கலாம் எனப் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந் நிலையில், அமெரிக்கத் தேர்தல்கள் பற்றிய நடைமுறையை இலகுவாகப் புரியவைக்க எத்தனிக்கிறது இக் கட்டுரை.

  • அமெரிக்கத் தேர்தல் பெரும்பாலும் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்குமிடையே ஏறத்தாள இரண்டு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. பசுமை (Green) மற்றும் விடுதலைக் கட்சி (Libertarian) போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும் அவை ஒருபோதுமே ஆட்சியைக் கைப்பற்றியதோ அல்லது அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததோ கிடையாது. வெல்லும் கட்சிக்கே எல்லாம் (Winner takes all) என்ற மரபு தான் இங்குண்டு.
  • ஜனநாயகக் கட்சி (Democratic Party) 1828 இல் ஆரம்பிக்கப்பட்டது. நவதாராள கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. குடியரசுக் கட்சி (Republican Party) 1854 இல் ஆரம்பிக்கப்பட்டது. அடிமைகளை விடுவிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவானது. சிறிய அரசாங்கம், கட்டற்ற பொருளாதாரம், தனி மனித சுதந்திரம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • இதுவரை 14 ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளும், 19 குடியரசுக் கட்சி ஜனாதிபதிகளும் ஆட்சி செய்திருக்கிறார்கள். 44 வது ஜனாதிபதியான பராக் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாவார்.
  • ஜனாதிபதி தேர்தல் 4 வருடங்களுக்கு ஒரு தடவை, நவம்பர் மாதத்தில் வரும் முதலாவது செவ்வாயன்று நடைபெறுகிறது.
  • அரசாங்கம் (Congress), 435 மக்கள் சபை உறுப்பினர்களையும், 100 செனட்சபை உறுப்பினர்களையும் கொண்டது. இதன் அரசியலமைப்பு செப்டம்பர் 17, 1787 இல் நடைமுறைக்கு வந்தது. இதுவரை 27 திருத்தங்கள் அமுற்படுத்தப்பட்டுள்ளன.
  • ஏனைய நாடுகளைப் போல் அமெரிக்க மக்கள் தமது ஜனாதிபதியை நேரடியாகத் தெரிவுசெய்வதில்லை. ஒவ்வொரு மாநிலங்களிலுமுள்ள மக்கள் தமக்கு விருப்பமான ஜனாதிபதிக்கு வாக்களிப்பார்கள். அவ்வாக்குகளின் பிரகாரம் அம்மாநிலம் தனது சனத்தொகைக்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ‘பிரதிநிதிகளை’ (electors)த் தெரிவுசெய்யும். தலைநகர் வாஷிங்டன் D.C. க்கு வழங்கப்பட்ட 3 ஐயும் சேர்த்து, மொத்தமாக 538 பிரதிநிதிகள் இருப்பார்கள் (435 மக்கள் சபை + 100 செனட் சபை). இதைத்தான் Electoral College votes என்கிறார்கள். இதில் 270 பிரதிநிதிகளின் வாக்குக்கள் யாருக்குக் கிடைக்கிறதோ அவரே ஜனாதிபதியாகிறார்.


  • சனத்தொகை கூடிய மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதிகள் கிடைக்கும். உ+ம்: கலிபோர்ணியா (55), டெக்சாஸ் (38), நியூயோர்க் (29), ஃபுளோறிடா (20, இலினோய் (20), பென்சில்வேனியா (20)…
  • சனத்தொகை குறைந்த மாநிலங்கள் Caucuses எனவும் கூடிய மாநிலங்கள் Primaries எனவும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலங்களும் தமது சட்டங்களுக்கேற்ப பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்றன. அநேகமாக Caucuses எனப்படும் மாநிலங்களில் வெளிப்படையான வாக்கெடுப்பாகவும், Primaries எனப்படும் மாநிலங்களில் இரகசிய வாக்க்கெடுப்பு மூலமும் பிரதிநிதிகள் தெரிவாகிறார்கள்.
  • அயோவா மாநில சட்டத்தின்படி, இங்குதான் முதலாவது Caucuses அல்லது Primaries தேர்தல் நடைபெற வேண்டும்.

கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை

  • அமெரிக்கா பெரும்பாலும் இரு கட்சி ஆட்சிமுறையில்தான் இயங்குகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தமது கட்சிக்கெனப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்றன. ஜனநாயகக்கட்சிக்கு மொத்த மாநிலங்களிலும் 4763 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். எவர் ஒருவர் 2807 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுகிறாரோ அவரே அக் கட்சியின் வேட்பாளராகத் தெரியப்படுவார். குடியரசுக் கட்சியில், 2,472 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்களில் 1,237 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றவர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுகிறார். நாடு தழுவிய ரீதியில் நடக்கும் கட்சியின் தேசிய மாநாட்டில் அவ்வேட்பாளர் முறையாகப் பிரகடனப்படுத்தப்படுவார்.
  • தேசிய மாநாடு முடிவுற்று ஓரிரு மாதங்களுள், வேட்பாளர் தனது உப ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வார். அது அவருடைய விருப்பப்படி நடக்கும். தேர்தல் இல்லை.


ஜனாதிபதி தேர்தல்

  • இரு கட்சிகளின் தேசிய மாநாடுகளில் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு நான்கு / ஐந்து மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் மாதத்தின் முதலாவது செவ்வாயன்று இது நடைபெறுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 18ம் நூற்றாண்டிலிருந்து தொடர்கிறது.
  • நவம்பர் தேர்தலின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றோ அல்லது தபால் மூலமோ வாக்களிக்கிறார்கள். வாக்குச் சீட்டில் இருக்கும் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்டோ, ஜனாதிபதி, உபஜனாதிபதிகளின் பெயர்களில் விரும்பிய கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்கலாம். இதைவிட, அரசியலமைப்பில் திருத்தம் செய்யவேண்டி ஏற்பட்டால் அதற்கான மக்கள் கருத்தை அறியும் தேவைக்காகவும் ஜனாதிபதி தேர்தல் பாவிக்கப்படுகிறது.
  • ஒரு மாநிலத்தில் ஒரு குறிக்கப்பட்ட வேட்பாளர் 50%த்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருந்தால், அந்த மாநிலத்துக்கென ஒதுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கையும் அவ் வேட்பாளருக்குக் கிடைத்துவிடும். ஆனால் அப் பிரதிநிதிகள் கட்டாயமாக மக்களின் விருப்பப்படி தமது வாக்குகளை மக்கள் விரும்பிய வேட்பாளருக்கே கொடுக்கவேண்டிய கட்டாயமில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டபடியே நடந்துவருகிறது.
  • இப்படியாக, எந்த வேட்பாளருக்கு 270 பிரதிநிநிதிகள் கிடைக்கிறார்களோ அவரே ஜனாதிபதியாகிறார்.
Print Friendly, PDF & Email