அமெரிக்க காங்கிரஸில் தமிழ் மரபுரிமை மாத முன்மொழிவு
தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி முன்மொழிந்தார்
தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனம் செய்ய்வேண்டுமென்ற கோரிக்கையை தமிழர் பொங்கல் திருநாளான இன்று (ஜனவரி 14) அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் இலிநோயிஸ் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ராஜா கிருஷ்ணமுர்த்தி அவர்கள் சபையின் இருதரப்பு முன்மொழிந்துள்ளார். மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றானதும், 360,000 அமெரிக்கர்கள் உட்பட, உலகில் 80 மில்லியன் மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழியின் சிறப்பை முன்னிட்டு அதன் கலாச்சார விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுரிமை மாதமாகப்’ பிரகடனப்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
“ஒரு தமிழ் அமெரிக்கனாக, தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரிய, கலாச்சார விழுமியங்களை அமெரிக்காவிலும் உலகம் பூராவும் கெளரவிக்கும் முகமாக ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்தும்படி நான் இந்த இருதரப்பு கோரிக்கையை முன்வைக்கிறேன். அமெரிக்கா ஒரு பல்மொழி, பல்கலாச்சார நாடு. இப்பிரகடனம் நிறைவேறும் பட்சத்தில் அது இங்கு வாழும் 350,000 தமிழர்களின் சாதனைகளை உலகுக்கு ஒளியிட்டுக் காட்டும். எனவே இப்பிரகடனத்தைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றும்படி நான் எனது சக உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), USTAG, PERAL போன்ற அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் இப்பிரேரணையை வரவேற்றிருக்கின்றன. ராஜ் கிருஷ்ணமூர்த்தியுடன் நிக்கோல் மல்லியோராக்கிஸ் (கு-நி.யோர்க்), ஷிறீ தனேடர் (ஜ-மில்), றோ கன்னா (ஜ-கலி), சுபாஸ் சுப்ரமணியம் (ஜ-வேர்), பிரமிளா ஜயபால் ((ஜ-வாஷி), ஏமி பேரா (ஜ-கலி), இல்ஹான் ஓமார் (ஜ-மின), யுவெற் கிளார்க் (ஜ-நி.யோ), சேறா ஜேக்கொப்ஸ் (ஜ-கலி), டெபோரா றொஸ் (ஜ-வட கரோ), டனி டேவிஸ் (ஜ-இலி), டீனா றைற்றஸ் (ஜ-நெவா), டொன் டேவிஸ் (ஜ-வட கரோ) மற்றும் சம்மர் லீ (ஜ-பென்) ஆகிய உறுப்பினர்கள் இப்பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தனர். இப்பிரேரணையின் பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
