பெப்ரவரி 4, 2020
இந்த வருடம் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் ‘வாக்கெடுப்பு’ நேற்று (திங்கட் கிழமை) ஆரம்பமானது. இதைப் Primary தேர்தல்கள் என அழைக்கிறார்கள். இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று இரவு வாக்குகள் எண்ணப்படவில்லை. அது இன்றிரவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாராக யார் வருவார்கள் என இன்றிரவு, ஓரளவுக்கு, ஆரூடம் கூறப்படும்.
அமெரிக்காவில் தேர்தல் தொகுதிகள் மாநிலம் (state)> மாவட்டம் (district) > கவுண்டி (county) > கோக்கஸ் (caucus) எனப் பிரிக்கப்படுகிறது. கனடாவில் தேர்தல் தொகுதியில் இருக்கும் constituent association எப்படித் தமது தொகுதிக்கான வேட்பாளரைத் தெரிவுசெய்கிறதோ (சில வேளைகளில் அது கட்சித் தலைமாயால் உதாசீனம் செய்யப்படுவதுமுண்டு) அதே போல மாநிலமெங்கும் precinct எனப்படும் தொகுதியமைப்புகள் உண்டு. இங்கு வாக்களிப்பவர்களில் 15% த்துக்கு மேல் வாக்குகளை எடுக்கும் போட்டியாளருக்கு delegates கிடைப்பார்கள். அதிக அலவிலான டெலிகேட்டுகளை எடுக்கும் போட்டியாளர் அடுத்த மாநிலத்தில் தனது தேர்தல் பிசாரங்களுக்கு நகர்வார். இப்படி முதல் மூன்று முதல் ஐந்து வேட்பாளர்கள் அயோவா மானிலத்தால் வடிகட்டி எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோவாவில் மொத்தம் 49 டெலிகேட்டுகள் இருக்கிறார்கள். தற்போதுள்ள நிலையில் பேற்ணி சாண்டர்ஸ் (10), பீற் புட்டிகியெக் (10), எலிசபெத் வரன் (4) என்ற நிலையில் இருக்கிறார்கள்.
ஏன் அயோவா?
அமெரிக்காவின் ஆகச் சிறிய மாநிலங்கள் அயோவாவும், நியூஹாம்ப்சயர் ஆகியன. ஆகப் பெரியன கலிபோர்ணியாவவும் (415) டெக்சாஸ் மாநிலமிம் (228). அயோவாவில் 48 வாக்குகள் இருக்கின்றன. அங்கு எத்தனைபேர் போட்டியிட்டாலும் 3 இலிருந்து 5 பேர் வரையில் தான் தேறுவார்கள். அயோவா, நியூஹாம்ப்சயர் மாநிலங்கள் இரண்டுமே பெரும்பானமையாக வெள்ளை இனத்தவரைக் கொண்டவை. எனவே சிறுபான்மை வாக்குகளை நம்பிவரும் வேட்பாளர்கள் இங்கு தோற்றுப்போய் ஊக்கம் குறைந்து போட்டியியிருந்து விலகுவது வழக்கம். (ஒபாமா இதுவெல்லாவற்றிற்கும் விதி விலக்கு). கடந்த 12 ஜனாதிபதி தேர்தல்களில் 9 தடவைகள் இங்கு தெரியப்பட்ட வேட்பாளர்கள் ஜனாதிபதியாகியிருக்கிறார்கள். இக் காரணத்துக்காக ஜனநாயகக் கட்சி தனது தேர்தலுக்கான முதலடியை இம் மாநிலத்தில் வைப்பது வழக்கம்.
இருப்பினும் குடியரசுக்கட்சிக்கு இன் நிலைமை ஏற்படாது. பொதுவாக ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்தவர், இரண்டாவது தடவையாகப் போட்டியிடும்போது, அவர் primary தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. விசேடமாக, அவர்களது ஆதரவு உச்சத்தில் இருந்தால் வேறெவரும் போட்டியிடப் போவதில்லை. இம்முறை டொனால்ட் ட்றம்பிற்கு ஏற்கெனவே 39 டெலிகேட்டுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருக்குப் போட்டியாக எவரும் நிற்கப்போவதில்லை. நின்றாலும் வெற்றிபெறப்போவதில்லை.
ஜனநாயகக் கட்சியில் இந்தத் தடவை 12 பேர் போட்டியிடுகிறார்கள். அயோவாவின் 99 கவுண்டிகளிலிருந்து 65% வாக்குகள் வந்த நிலையில், முன்னணியில் இருக்கும் புட்டிகியெக், சாண்டர்ஸ், வரன், பைடன் ஆகியோர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த வருடம் இரண்டு இந்திய வம்சாவளியினரான கமலா ஹரிஸ் மற்றும் துள்சி கப்பார்ட் போட்டியிட்டார்கள். இவர்களில் கமலா ஹரிஸ் பிறைமரி தேர்தலிலிருந்து பின்வாங்கி விட்டார். துள்சிக்கு அயோவாவில், இதுவரையில் ஒரு டெலிகேட்டுகளும் கிடைக்கவில்லை.
வாக்களிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளைத் தொலைபேசி app மூலம் அனுப்ப முயன்றார்கள் எனவும் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் வாக்குகளின் முழுமையாக அனுப்பப்படமுடியாமையால் இன்றிரவு முடிவுகள் வெளியாகவில்லை.
இதுவரை கிடைத்த முடிவுகள்:
Last updated: 2/4/2020, 7:20:13 PM
CANDIDATE | VOTES | PERCENT | |
---|---|---|---|
Bernie Sanders | 27,088 | 24.53% | |
Pete Buttigieg | 23,666 | 21.43% | |
Elizabeth Warren | 20,848 | 18.88% | |
Joe Biden | 16,179 | 14.65% | |
Amy Klobuchar | 14,032 | 12.70% | |
Andrew Yang | 5,760 | 5.22% | |
Tom Steyer | 1,879 | 1.70% | |
Uncommitted | 626 | 0.57% | |
Michael Bloomberg | 112 | 0.10% | |
Other | 103 | 0.09% | |
Michael Bennet | 96 | 0.09% | |
Deval Patrick | 46 | 0.04% | |
Tulsi Gabbard | 12 | 0.01% | |
John K Delaney | 0 | 0.00% |
65.49% reporting (1099 of 1678 precincts) | 110,447 total votes