Spread the love

அமெரிக்காவில், இன்று (செவ்வாய் ஏப்ரல் 28) கோவிட்-19 நோய்த் தொற்று 1,002,498 எனவும், 57,266 பேர் மரணமடிந்திருப்பதாகவும், ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுவரை 5.6 மில்லியன் அமெரிக்கர்கள் நோய்க்கான பரிசோதனைகளைச் செய்துள்ளார்கள்.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் கோவிட்-19 பற்றிய விடயங்களின் புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் உத்தியோகபூர்வமான நிறுவனமாக அது இருக்கிறது.

ஒப்பீட்டளவில், உலகம் பூராவுமான தொற்றுக்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனவும், இறப்புக்களின் எண்ணிக்கை 215,000 எனவும் அறியப்படுகிறது.

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம், திங்களன்று, மேலு 6 நோயறிகுறிகளைச் சேர்த்திருக்கிறது. இவ்வறிகுறிகளைக் கொண்டோர் நோய்ப்பரிசோதனைக்குத் தகமையுடையவர்களாவார்கள். இருமல் அல்லது மூச்சுத் திணறலுடன் மேலும் இரண்டு அல்லது மூன்று அறிகுறிகளைக் கொண்டிருந்தால் ஒருவர் தன்னைப் பரிசோதித்துக்கொள்ள முடியும். அவை:

  • காய்ச்சல் (fever)
  • குளிர் (chills)
  • வெட வெடப்புடன் கூடிய குளிர் (repeated shaking with chills)
  • தசை நோவு (muscle pain)
  • தலைவலி (headache)
  • தொண்டை கரகரப்பு (sore throat)
  • புதிதாக சுவை அல்லது முகர்விழப்பு (new loss of taste or smell)

90 நாட்களுக்கு நீடிக்கவல்ல புதிய கிருமிநாசினி கண்டுபிடிப்பு

ஹொங்க் கொங் விஞ்ஞான மர்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 90 நாட்களுக்கு நீடிக்கும் கிருமிநாசினியொன்றைத் தயாரித்துள்ளனர். எந்த மேற்பரப்பிலுள்ள வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யவல்லது இக் கிருமிநாசினி என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த் தொற்று 1 மில்லியனைத் தாண்டியது! 1
90 நாட்களுக்கு நீடிக்கும் கிருமிநாசினி

MAP-1 என அழைக்கப்படும் இன் நுண்ணுயிர் எதிரி நுண்ணுயிர்கள் மீதான போர்வையொன்ற உருவாக்குவதன் மூலம் அவற்றைச் செயலிழக்கச் செய்கிறது எனக் கூறப்படுகிறது. கண்ணாடி, உலோகம், பிளாஸ்டிக், தோல், துணிவகை எதுவானாலும் அதிலுள்ள நுண்ணுயிர்களை அழிக்க இது பயன்படுகிறது என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

மே மாதமளவில் இப் பொருள் கடைகளில் விற்பனைக்கு வருமென அறிவிக்கப்படுகிறது. ஹொங்க் கொங் தவிர்ந்த வேறு நாடுகளில் இது விற்பனை செய்யப்படுமா எனத் தெரியவில்லை.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | உலக முழுவதிலும் இருக்கும் றெம்டெசிவிர் மருந்தை அமெரிக்கா வாங்கியது