அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு | 20 பேர் மரணம்?
பிந்திய செய்தி:
- 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 24 பேருக்கு மேல் காயமடைந்திருக்கிறார்கள்
- சந்தேக நபர் 21 வயதுடைய பற்றிக் குருசியஸ் சரணடைந்துள்ளார்
- குற்றச்செயலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை
சந்தேக நபர்: பற்றிக் குருசியஸ் 21 வயது
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 20 பேருக்கு மேல் இறந்தோ அல்லது காயப்பட்டோ இருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Photo Credit: AFP/Getty Images
டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோ நகரிலுள்ள சியெலோ விஸ்டா பெருமங்காடியிலுள்ள வால்மாட் சந்தையில் இச் சூட்டுச் சம்பவம் இடைபெற்றுள்ளது. ஆயுதம் தரித்த காவல் துறையினரும் எப்.பி.ஐ. கவச வாகனங்களும் சம்பவ இடத்தைச் சூழ்ந்துள்ளதாகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
சூடு நடைபெற்றதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.