News & AnalysisWorld

அமெரிக்காவில் (கொலொராடோ) மற்றுமொரு சூட்டுச் சம்பவம் – 10 பேர் மரணம்

அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் சென்ற வாரம் நடைபெற்ற சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மற்றுமொரு சூட்டுச் சம்பவம் இன்று கொலொராடோவில் நடைபெற்றுள்ளது. பூல்டர் என்னும் நகரிலுள்ள பல்பொருளங்காடியில் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது ஒரு பொலிஸ்காரர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

‘கிங்க் சூப்பெர்ஸ்’ (King Soopers) என்ற பெயருடைய கடையில் பி.ப. 2:49 மணிபோல் நடைபெற்ற இச் சூட்டுச் சம்பவத்தை ஒரு தனி நபரே மேற்கொண்டிருந்ததாகவும் அவர் இப்போது கைதுசெய்யப்பட்டுவிட்டார் அதனால் மேற்கொண்டும் ஆபத்து எதுவுமில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிதாரி பற்றியோ அல்லது இறந்தவர்கள் பற்றியோ விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சென்ற வாரம் அட்லாண்டாவில் நடைபெற்ற சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் வாழும் சீன, கொரிய, வியட்நாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி ட்றம்ப் சீநாவின் மீது காட்டிய பகிரங்க வெறுப்பு எனக் கூறப்பட்டது.

இச் சம்பவத்தின்போது பல்பொருளங்காடியிலுள்ள மருந்தகத்தில் கோவிட் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது எனவும் அறியப்படுகிறது. பெரும்பாலான ட்றம்ப் ஆதரவாளர் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியான 51 வயதுடைய எரிக் ரலி, விடயத்தைக் கேவிப்பட்டதும் அந்த இடத்துக்கு விரைந்த முதலாவது அதிகாரி என அவரது மேலதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை இனப் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன எனவும் அவர்களது தாக்குதல்கள் பெரும்பாலும் இலகுவில் இனம்காணக்கூடிய குடியேறிகளின்மீதே பிரயோகிக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பெரும்பாலான பல்பொருளங்காடிகள் புதிய குடுயேறிகளால் நிர்வகிக்கப்படுகிறது.