அமசோன் பிறைமில் கார்த்தியின் ‘விருமன்’
செப்டம்பர் 11 இல் வெளிவருகிறது
ஆகஸ்ட் 12 இல் வெளியாகித் திரையரங்குகளில் வசூலில் பெரு வெற்றியத் தேடித்தந்துகொண்டிருக்கும் கார்த்தியின் விருமன் செப்டம்பர் 11 அன்று அமசோன் பிறைம் தளத்தில் விநியோகிக்கப்படவுள்ளது. சூர்யா-ஜோதிகாவின் 2D என்ரெரெய்ண்ட்மெண்ட் நிறுவனத்தின் தாயரிப்பில் உருவான, பெரும்பாலும் பொழுதுபோக்கை முன்வைத்த கதையுடனான இப்படத்தை எம்.முத்தையா இயக்கியுள்ளார்.
கொம்பன், கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா. பரம ரசிகர்களிக் குறியாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்.அதிதிக்கு இது முதற்படம். பிரகாஜ் ராஜ், ராஜ் கிரண், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜ் இசையமைத்திருக்கிறார்.