அப்பிள் iPhone, கணனி பாவனையாளர்களுக்கு முக்கிய செய்தி

பழைய மாடல்கள் வைத்திருப்பவர்கள் புதிய மாடல்களை வாங்கும்படி அப்பிள் நிறுவனம் அழுத்தம்?

பழைய ஐ.-ஃபோன்களை வைத்திருப்பவர்கள் அப்பிள் நிறுவனம் அவ்வப்போது விடுவிக்கும் software update களை உடனடியாக install செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதன் மூலம் அப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தும் சேவைகளையோஈ அல்லது ஏற்கெனவோ பாவனையிலிருக்கும் சேவைகளுக்கான திருத்தங்களையோ பாவனையாளர்கள் பாவிக்கும்படி நிறுவனம் அழுத்தம் கொடுக்கிறது எனக் கூறப்படுகிறது. பழைய ஃபோன்களில் இச்சேவைகளை update பண்ணாதவர்கள் விரைவில் இச் சேவைகளிலுமிருந்து துண்டிக்கப்படுவார்கள் என அப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

பல சேவைகள் ஃபோன்களின் இயங்கு திறனை முன்னேற்றுவதாகவோ அல்லது ஏற்கெனவே அறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதாகவோ இருப்பது வழக்கம். ஆனால் சில திருத்தங்கள் அப்பிள் போன்ற நிறுவனங்களுக்கோ அல்லது ஃபோன் நிறுவனங்களைக் கருவியாகப் பாவிக்கும் அரசாங்கங்களுக்கோ பலன் தருபவையாக இருப்பதுமுண்டு. இக்காரணங்களுக்காக அறிவிக்கப்படும் திருத்தங்களைப் பாவனையாளர்கள் உடனடியாகச் செயற்படுத்தவேண்டுமென நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன.

ஒப்பீட்டளவில் அப்பிள் நிறுவனம் தனது பாவனையாளர்களுக்கு நீடிக்கப்பட்ட சேவைகளை வழங்கிவருவது என அறியப்பட்டது. அப்பிள் கணனிகள், ஃபோன்கள் போன்றவற்றின் இயங்கு செயலியாக இருக்கும் OS (Operating System) ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தது 5 வருடங்களுக்கு இலவச திருத்தங்களை அந் நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனாலும் கணனிகளும் ஃபோன்களும் ஒழுங்காக வேலை செய்கின்றன தானே என்ற எண்ணத்தில் இத் திருத்தங்களைப் (updates) பலர் உதாசீனம் செய்துவிடுவது வழக்கம். சில வேளைகளில் இத் திருத்தங்களே புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடலாம் என்ற அச்சத்திலும் சிலர் அவற்றை உதாசீனம் செய்வது வழக்கம். மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் மூலம் பாவனையாளர்களை இத்திருத்தங்களை இணைத்துக்கொள்ளும்படி அப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என நிபுணர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டொரு திருத்தங்களைச் செய்யாதவர்கள் இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை எனவும் கணனிகளையோ அல்லது ஃபோன்களையோ வாங்கிய நாளிலிருந்து திருத்தங்களை உள்வாங்கிக்கொள்ளாதவர்கள், குறைந்தது 5 வருடங்களுக்கு, சில சேவைகளை இழக்கும் ஆபத்து இருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இரண்டு வருடங்களுக்கு மேலாக அப்பிள் கணனிகள் அல்லது ஃஇ-ஃபோன்களை வாங்கியவர்கள் நிறுவனத்தால் வழங்கப்படும் திருத்தங்களை உடனடியாக install பண்ணும்படி அப்பிள் நிறுவனம் எச்சரிக்கிறது.

பாதிக்கப்படக்கூடிய அப்பிள் கருவிகள்

iOS 11 (v11.2.6) ஐ-ஃபோன்கள் அல்லது அதற்கு முந்திய iOS செயலிகளில் இயங்கும் ஐ.ஃபோன்கள் போன்றவை அப்பிள் நிறுவனத்தின் திருத்தங்களை உள்வாங்கியிராவிட்டால் iMessage, FaceTime, App Store, Apple Maps, Siri, Apple Music, Apple Arcade, Apple TV+, Fitness+ ஆகிய சேவைகளை இழப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

macOS 10.13-10.13.3 (High Sierra) செயலிகளைக் கொண்ட மக்கின்ரொஷ் கணனிகளைப் பாவிப்பவர்களும் மேற்கண்ட சேவைகளை இழக்கும் சாத்தியமுண்டு.

watchOS 4-4.2.3 செயலியில் இயங்கும் Apple Watch களைப் பாவிப்பவர்களும் மேற்குறிப்பிட்ட சேவைகளை இழக்கலாம்.

tvOS 11-11.2.6 செயலியில் இயங்கும் அப்பிள் தொலைக்காட்சிகளும் மேற்கண்ட சேவைகளிலிருந்து துண்டிக்கப்படலாம். (Photo by CDC on Unsplash)