‘அன்புடன் தமிழ்’ | ரொறோண்டோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் இணையவழி இசை நிகழ்ச்சி
வெற்றிகரமாக நடைபெற்ற “அன்புடன் தமிழ் 2021” இணைய வழி இசை நிகழ்வு !

ரொறோண்டோ பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்வான “அன்புடன் தமிழ்” இசை நிகழ்ச்சி ஒன்று, கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், பெப்ரவரி 28, 2021
அன்று இணையவழியாக நடைபெற்றது.
உலகெங்குமிருந்து பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்கள், தமிழ் ஆர்வலர்கள் பார்த்துக், கேட்டு மகிழ்ந்த இந் நிகழ்ச்சியில் பதினாறு நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.
செம்மொழியாம் தமிழ் மொழியை உலகின் முகட்டில் ஏற்றிவைக்கும் உன்னத கடமையில் தம்மை அர்ப்பணித்து, ஈடுபடுத்தி இக கலைஞர்கள் சகலரையும் மகிழ்வித்திருந்தனர்.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் விபரம்:
இந்தியா – செந்தில் கணேஷ்
இலங்கை – கோகுலன் சாந்தன்
மலேசியா – ரி.எம்.எஸ் சிவகாந்தன்
சிங்கப்பூர் – சினேகா முரளி
ஜப்பான் – சங்கீதா பிரசாந்
தென்னாப்பிரிக்கா – யுவானி நாயுடு
கட்டார் – டாக்டர் சகாயா பிரவீன்
பிரிட்டன் – ஒய். யாதவன், எஸ். கஜன்
ஜெர்மனி – எஸ்.கண்ணன்
டென்மார்க் – ஸ்ரெவாஜா வி.சுயாபிரகாஷ்
சுவிஸ் – மிதுலா சிவானந்தராஜா
நோர்வே – ரமேஷ் தேவராஜா
நெதர்லாந்து – வி.எஸ்.ஜெயன்
ஆஸ்திரேலியா – ஐஸ்வர்யா அரவிந்த் & ஜிரே கணேசராஜா ஐஸ்வர்யா
அமெரிக்கா – கிருஷ்ணமூர்த்தி லக்சுமிநரசிம்மன்
மொன்றியல், கனடா – கௌரீஸ் சுப்பிரமணியம்
ரொறொன்டோ, கனடா – சாஹினா கனகராஜா
“எழுமின்” நிறுவனர் வண ஜெகத் கஸ்பர் ராஜ், அவர்களின் சிறப்புமிகு உரையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியத்தின் (FTENA) தலைவர் திரு கால்ட்வெல் வேல்நம்பி மற்றும் கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் திரு சிவன் இளங்கோ ஆகியோரும், ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருந்தனர்.
இந் நிகழ்வினை செல்வி அபிஷேகா லொயிட்சன் நெறிப்படுத்தினார்.
“மெகா ட்யூனர்ஸ்” புகழ் அரவிந்தன் மகேசன் நிகழ்வில் பங்களித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
“ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் (ஏறத்தாள 175,000 கனடிய டொலர்கள்) பங்களிப்பைக் கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையை உருவாக்கத் தேவையான மூன்று மில்லியன் டொலர்கள் இலக்கை அடைய, மேலும் 400,000 கனடிய டொலர்களைத் திரட்ட வேண்டியுள்ளது. அடுத்துவரும் அறுபது நாட்களில் நிதி திரட்டும் இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “தமிழ் இருக்கை” உருவாக்கத்தில் தங்களையும் ஒருவராக இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்” என கனடிய தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நிதியுதவி வழங்குவதற்கான ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை இணையத்தளம் : www.torontotamilchair.ca
“அன்புடன் தமிழ்” நிகழ்வைப் பார்க்கத் தவறியவர்கள், கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளி மூலம் பார்த்து மகிழலாம்
அன்புடன் தமிழ்
ரொறோண்டோ தமிழ் இருக்கைக்கான நிதி சேர் இசை நிகழ்ச்சி
மனமே உடல் என வாழ்ந்துகாட்டிய சாந்தி அம்மா மறைந்தார்




Previous
Next
