அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் மலையக இளையோருக்கு தொழிற்பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்
மஸ்கேலியாவை அண்டி வாழும் மலையக இளையோருக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக கற்கை நிலையமொன்றை அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) ஆரம்பித்துள்ளது. தையல மற்றும் கேக், விளையாட்டுப் பொருட்கள், சவர்க்காரம் ஆகியன செய்தல் போன்ற பலவகையான தொழிலகள் இங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் இளையோர் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கற்று சமூகத்தில் அவற்றைப் பிரயோகப்படுத்துவதன் மூலம் எதிர்காலச் சந்ததியினர் சுய தொழில்களை ஆரம்பிப்பதன் மூலம் பிறரில் தங்கி வாழாத நிலையை எய்துவதற்கு உதவியாகவிருக்கும்.
மஸ்கேலியாவில் மவுசாக்கலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் இந் நிலையத்தில் பயிலும் இளையோருக்கு அமெரிக்காவிலுள்ள அனைத்துலக மருத்துவ நல அமைப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்குகின்றது.




