GTF

அனுரகுமாரவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனுரகுமார திசநாயக்காவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்திருக்கிறது.

“எளிமையான குடும்பத்திலிருந்து வந்த அவர் தனது அரசியல் பயணம் முழுவதும் ஒரு மக்கள் நாயகனாக இருந்து வந்ததோடு அவரது சாதனைகள் மூலம் சகல பின்னணிகளைக் கொண்ட இளைய சந்ததியினரும் உயர்ந்த கனவுகளைக் காணமுடடியுமென்பதையும் நிரூபித்திருக்கிறார்” என ஜனாதிபதி அனுரகுமாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட இச்செய்தியின் முழுமையான வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.