அனந்தி சசிதரன் கட்சி சிறீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தில் இணைவு! -

அனந்தி சசிதரன் கட்சி சிறீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தில் இணைவு!

Spread the love

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ்ந்து இயங்குவதற்கு ஈழத்தமிழா் சுயாட்சி கழகம் தீா்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளா் திருமதி அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்த நான் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுக்க தீா்மானித்துள்ளேன்

அனந்தி சசிதரன்

மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் ஈழத்தமிழா் சுயாட்சி கழகத்திற்கும் இடையில் இன்று காலை மூடிய அறைக்குள் நீண்ட சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னா் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன் போது மேலும் அவா் கூறுகையில், வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்த நான் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுக்க தீா்மானித்துள்ளேன். இதற்காக நான் மலையகத்தை சோ்ந்த மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கொள்ளை அடிப்படையில் சோ்ந்து பயணிக்க தீா்மானித்துள்ளேன். இதன் ஊடாக மலையக மக் கள் அன்றாடம் எதிா்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளை ஐ.நாவில் மலையக மக்கள் சாா்பில் பேசவுள்ளேன் என தெரிவித்தார்.

இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பினை அவர் யாழிலுள்ள நட்சத்திரவிடுதியில் நடத்தியிருந்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  நோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை!