Arts & EntertainmentIndia

‘அந்நியன்’ பட உரிமை முழுவதும் எனக்கே உரியது – இயக்குனர் சங்கர்

“‘அந்நியன்’ படத்தின் கதையுட்பட அனைத்து உரிமைகளும் எனக்கே உரியது ” என திரப்பட இயக்குனர் சங்கர் ஹெரிவித்துள்ளார்.

2005 இல் வெளியான ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் தயாரிக்கவிருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்ததைத் தொடர்ந்து மறுநாள், அப்படத்தின் உரிமை தனக்கே உரியது எனவும் அதை மீறி இயக்குனர் சங்கர் அப் படத்தைத் தயாரிப்பது காப்புரிமை மீறல் (breach of copy rights) எனவும்கூறி, ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் ‘ஆஸ்கர் வீ. ரவிச்சந்திரன் இயக்குனர் சங்கர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த இயக்குனர் சங்கர், “அந்நியனின் ஸ்கிறிப்ட் தன்னிடமே உள்ளது எனவும், அதைத் தான் எப்படியானாலும் பாவிக்க உரிமையுள்ளவன் எனவும் கூறியுள்ளார். “இப் படத்தோடு தொடர்புள்ள அனைவருக்கும் இப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே என்னுடையவை என்பது தெரியும். அதே வேளை இப் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் சங்கர் எனவே திரைப்படத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப் படத்திற்காந திரைக்கதையை எழுதும்படி நாந் யாரையும் பணிக்கவில்லை. அதன் முழு உரிமையும் எனக்குத்தானுண்டு. அதை நான் எப்படியானாலும் பாவிக்கலாம். எனது உரிமைகள் மீது யாரும் இடையூறு விளைவிக்க அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார் இயக்குனர் சங்கர்.

 

ரன்வீர் சிங்

‘ஆச்கார்’ ரவிச்சந்திரன் இயக்குனர் சங்கருக்கு புதனன்று அனுப்பிய சட்ட அறிக்கையில், “‘அந்நியன்’ படத்தை இந்தியில் தயாரிக்கப்போகிறேனென்று சங்கர் அறிவித்திருந்தமை தொடர்பில் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், அப் படத்திற்கான முழு உரிமைகளையும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தானே வாங்கியிருந்ததாகவும் படத்தின் கதைக்கான உரிமை தனக்கே உரியது எனவும், தன்னுடைய அனுமதியின்றி அப்படத்தைத் தயாரித்தால் அது காப்புரிமை மீறலாகவே அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியில் தயாராகவிருக்கும் ‘அந்நியன்’ படத்தில் ரன்வீர் சிங், விக்ரத்தின் பாத்திரத்தில் நடிக்கிறார். 2022 நடுப்பகுதியில் இப் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. பரந்த இந்தியாவுக்குமான திரைப்படமாகத் தயாரிக்கப்படவுள்ள இப் படம், ‘பென் ஸ்ரூடியோஸ்’ ஜயந்திலால் காடாவைத் தயாரிப்பாளராகவும், ‘கோட் பிளெஸ் எண்டெர்டெயின்மெண்ட்’ ஐ துணைத் தயாரிப்பாளராகவும் கொண்டு சங்கரின் இயக்கத்தில் தயாராகவுள்ளது.