அறிவித்தல்கள்

அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துக்கட்சிகளும் கலந்துரையாடல்

அறிவித்தல்

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் உபசரணையில் யாழ். மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் ஜூலை 15, 2023 சனிக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேரா.சி.பத்மனாதன் தலைமையில் ஒரு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் பங்குபற்றும் இவ்வமர்வில் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றிக் கலந்துரையாடப்படும். இதற்கான நிகழ்ச்சி நிரல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தல் மற்றும் இதில் இந்தியாவின் பங்கு பற்றி இங்கு ஆராயப்படும்.