Arts & EntertainmentNewsSri Lanka

‘அண்ணாத்த’ படத்தில் ஈழத்து நாதஸ்வரக் கலைஞர் குமரன் பஞ்சமூர்த்தி


குமரன் பஞ்சமூர்த்தி

நடிகர் ரஜினிகாந்தின் 168 ஆவது தமிழ்ப் படமான ‘அண்ணாத்த’ யில் யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் குமரன் பஞ்சமூர்த்தியின் இசையும் பங்கு பெறுகிறது.

இப்படத்துக்கு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரான டி.இமான் இசையமைத்திருக்கிறார். இதில் வரும் பாடலொன்றில் குமரன் பஞ்சமூர்த்தியின் நாதஸ்வர இசையும் சேர்ந்து சிறப்பித்துள்ளது. ஈழத் தமிழர்களது திறமைகளை இனம் கண்டு அவற்றை வெளிக்கொணரும் கலைஞர்களில் டி. இமான் முன்னணியில் இருப்பவர். ரொறோண்டோ பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவிருக்கும் தமிழ் இருக்கைக்காக அழகிய கீதமொன்றை இசையமைத்துக் கொடுத்தவர்.

சிவா எழுதி, இயக்கி, சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘அண்ணாத்த’ வில் ரஜினிகாந்துடன் நயந்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உட்படப் பல பிரபல கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

பிரபல இசைக்குடும்பத்திலிருந்து வந்த குமரன் பஞ்சமூர்த்தியின் நாதஸ்வர இசை ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் மத்தியில் பிரபலமானது. ‘அண்ணாத்த’ மூலம் அது உலகம் முழுவதும் அவரது புகழைப் பரவச் செய்யுமென நம்பலாம்.