HealthNews & AnalysisWorld

ஃபைசர் தடுப்பு மருந்தினால் ‘தென்னாபிரிக்க வைரஸை’ த் தடுத்து நிறுத்த முடியாது -இஸ்ரேலிய ஆய்வு

கொறோணாவைரஸின் திரிபுகளில் ஒன்றான ‘தென்னாபிரிக்க வைரஸ்’ தொற்றிலிருந்து ஃபைசர் /பயோஎன்ரெக் தடுப்பு மருந்து மனிதரை முற்றாகப் பாதுகாத்துக்கொள்ள முடியாது என இஸ்ரேலிய ஆய்வொன்று கூறுகிறது. ஆனாலும், இஸ்ரேலில் கோவிட் தொற்று மற்றும் ஆய்வுக்கான தரவுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதாலும், இந்த குறிக்கப்பட்ட ஆய்வின்மீது இதர விஞ்ஞான சமூகம் இன்னும் தமது கருத்துக்களை முன்வைக்காததனாலும் (peer review) இவ்வாய்வின் உண்மைத் தன்மை பற்றி எவரும் தீர்க்கமான முடிவுகளை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் அதி பெரிய சுகாதார சேவை வழங்கும் நிறுவனமான கிளெய்ட் (Clait) மற்றும் ரெல் அவிவ் பல்கலைக் கழகமும் (Tel Aviv University) சேர்ந்த்ஹு இவ்வாய்வைச் செய்திருக்கின்றன.

நேற்று (சனி) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஃபைசர் தடுப்பு மருந்தை எடுத்து 14 நாட்களின் பின் நோய்த் தொற்று அவதானிக்கப்பட்ட 400 பேர்களோடு, தடுப்பு மருந்தை எடுக்காது நோய்த் தொற்று ஏற்பட்ட (இன்னுமொரு ) 400 பேர்களோடு ஒப்பிட்டு இவ்வாய்வு செய்யப்படிருக்கிறது.

இவர்களின் வயது, பால் போன்ற முக்கிய அம்சங்கள் ஆய்வின்போது கருத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

இவ்வாய்வு செய்யப்பட்ட அனைத்து நோய்த் தொற்றாளர்களிலும், 1% மானவர்கள் தென்னாபிரிக்க வைரஸ் என அழைக்கப்படும், திரிபு B.1.351 ஐக் கொண்டிருந்தார்கள்.

ஃபைசர் / பயோஎன்ரெக் மருந்தின் இரண்டு ‘டோஸ்’ களையும் எடுத்தவர்களின் உடலில் (5.4%), தடுப்பூசி எடுக்காதவர்களின் உடலில் (0.7%) இருந்ததைவிட எட்டு மடங்கு அதிகமான வைரஸ்கள் இருந்தனவென இவ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை முதன் முதலில் தொற்றை ஏற்படுத்திய வைரஸ் (original) மற்றும் பிரித்தானிய திரிபு ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும், தென்னாபிரிக்க வைரஸ் மாத்திரமே இத் தடுப்பு மருந்தை மீறும் வல்லமையைப் பெற்றிருக்கிறது எனவும் இந்த ஆய்வாளர் கூறுகிறார்கள்.

“தடுப்பு மருந்து எடுக்காதவர்களை விட, இரண்டு டோஸ்களையும் எடுத்தவர்களது உடலில், ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமான தென்னாபிரிக்க வைரஸ் திரிபு காணப்பட்டது என்பது ஃபைசர் தடுப்பு மருந்தினால் உருவாக்கப்படும் நோயெதிர்ப்பையும் மீறும் வல்லமையைத் தென்னாபிரிக்க வைரஸ் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகிறது” என ரெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானியான ஏடி ஸ்ரேர்ண் கூறுகிறார்.

இஸ்ரேலில் தென்னாபிரிக்க வைரஸ் தொற்று குறைவாக இருப்பதாலும், இது ஒரு சிறிய மக்கள் தொகையில் செய்யப்பட்ட பரிசோதனையாதலாலும் இம் முடிவுகள் பற்றி அவதானமாக இருக்கும்படியும் இதர ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 1 இல் ஃபைசர் / பயோஎன்ரெக்கினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவிட்-19 நோயைத் தடுப்பதில் தமது மருந்து 91% செயற்திறன் கொண்டது எனவும் அது குறைந்தது 6 மாதங்கள் வரை நோயிலிருந்து மனிதரைப் பாதுகாக்கிறது எனவும் குறிப்பிடுகிறது.

மூன்றாவது டோஸ் ஆன ‘booster shot’ தடுப்பூசியத் தாயாரிக்கும் பணியில் ஃபைசர் / பயோஎன்ரெக் இறங்கியுள்ளதாகவும், தேவையானால் அதை மாற்றித் தென்னாபிரிக்க வைரஸைத் தடுக்கும் மருந்தாக மாற்றிக்கொள்ள முடியுமெனவும் ஃபைசர் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க திரிபு ஃபைசர் தடுப்பு மருந்தை உடைத்துக்கொண்டு பரவக்கூடையாத இருந்தாலும், அதன் பரவும் வேகம் பிரித்தானிய திரிபுடன் ஒப்பிடும்போது குறைவு, காரணம் தென்னாபிரிக்க வைரஸின் பரவலை பிரித்தானிய வைரஸ் தடுத்துவிவிடுவதனாலாகவும் இருக்கலாம் என்கிறார் ஸ்ரேர்ண்.